ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டம்: தமிழ்நாடு முழுவதும் எதிர்ப்புக் குரல் - குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம்

கோயம்புத்தூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தேனி, கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

caa against protest
caa against protest
author img

By

Published : Jan 4, 2020, 9:29 AM IST

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து 20 நாள்களாக தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்றுவருகிறது. மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி வலியுறுத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள், பேரணி என வெவ்வேறு வடிவங்களில் வலுத்துவருகிறது. இந்நிலையில், தேனி, கோயம்புத்தூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

கோயம்புத்தூர்:

கோயம்புத்தூர் மாவட்டம் ஹக்கீம் சாலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர். மரக்கடையில் தொடங்கி வெரைட்டி ஹால் வரை கைகோத்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது.

தேனி:

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் நெல்லை கண்ணனை விடுதலை செய்ய வலியுறுத்தியும் அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நேற்று மாபெரும் பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன. பெரியகுளம் தென்கரையிலிருந்து ஊர்வலமாகப் பேரணி சென்று வடகரையில் உள்ள புதிய பேருந்துநிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தபால் அலுவலகம் முன்பு அனைத்து ஜமாத், இஸ்லாமியர்கள் கூட்டமைப்பு சார்பாக மத்திய அரசைக் கண்டித்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியும் ஏராளமான இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர் ஆடலரசன், நாகப்பட்டின மக்களவை உறுப்பினர் செல்வராசு, நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தமிமுன் அன்சாரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், "தமிழ்நாடு அரசு வருகின்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கேரளாவைப் போன்று இந்தச் சட்டத்தை திரும்பப்பெறக்கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" எனக் கூறினார்.

தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும் பல்வேறு கட்சியினரும் இணைந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டம்

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேசுகையில், "குடியுரிமை திருத்தச் சட்டம் மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும், ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு சட்டம். அமித் ஷா கூறுகையில், ’எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும் இந்தச் சட்டத்தை திரும்ப பெற மாட்டேன்’ எனக் கூறியிருக்கிறார்.

என்ஆர்சி சட்டத்தை அசாமில் கொண்டுவந்ததோடு மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும் அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரமாட்டோம் என்று மத்திய அரசு தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்" என்று கூறினார்.

Intro:குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்Body:குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்.

கோவை மரக்கடை நவாப் ஹக்கீம் சாலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மனித சங்கிலியில் ஈடுபட்டவர்கள் தேசிய கொடியை பிடித்தவாறு நின்றனர். மரக்கடையில் தொடங்கி வெரைட்டி ஹால் வரை கை கோர்த்து மனித சங்கியில் ஈடுபட்டனர். போராடத்தில் ஈடுப்படவர்கள் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர் . மத்திய அரசு விரைந்து இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டதால் போலீஸார் அவர்களை சீர் படுத்தி விரைந்து ஆர்ப்பாட்டத்தை முடித்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.