ETV Bharat / state

அகில இந்திய கூடைப்பந்து - தென்னக ரயில்வே சாம்பியன் - அகில இந்திய கூடைப்பந்து

கோவை: அகில இந்திய அளவிலான கூடைப்பந்து இறுதிப் போட்டியின் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி அணியும், பெண்கள் பிரிவில் தென்னக ரயில்வே(சென்னை) அணியும் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றன.

basketball
author img

By

Published : Jun 2, 2019, 9:27 AM IST

கோவையில் 54ஆவது ஆண்களுக்கான நாச்சிமுத்துகவுண்டர் கோப்பை, 18ஆவது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் மே 27ஆம் தேதி தொடங்கியது. கோவையில் உள்ள வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள எட்டு ஆண்கள் அணி, எட்டு பெண்கள் அணி என மொத்தம் 16 அணிகள் கலந்துகொண்டன.

இதில் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான ஆண்கள் இறுதிப் போட்டியில் வருமான வரி அணியை எதிர்த்து இந்தியன் வங்கி அணி விளையாடியது. இப்போட்டியில் இந்தியன் வங்கி அணி 74-64 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றிக் கோப்பையைத் தட்டிச் சென்றது. வெற்றிபெற்ற இந்தியன் வங்கி அணிக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் சுழற்கோப்பையும் வழங்கப்பட்டன. இரண்டாம் இடம் பிடித்த வருமான வரித்துறை அணிக்கு 50 ஆயிரம் ரொக்கமும், கோப்பையும் வழங்கப்பட்டன.

இதே போன்று சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான பெண்கள் பிரிவில் தென்னக ரயில்வே சென்னை அணியை எதிர்த்து தென் மத்திய ரயில்வே செகந்திராபாத் அணி விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்றதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இறுதியில் தென்னக ரயில்வே அணி 57-55 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்று சி.ஆர்.ஐ. சுழற்கோப்பை, 50 ஆயிரம் பரிசுத் தொகையையும் தட்டிச் சென்றது. இரண்டாம் இடம் பிடித்த தென் மத்திய ரயில்வே செகந்திராபாத் அணிக்கு 25,000 ரொக்கப் பரிசும் கோப்பையும் வழங்கப்பட்டன.

இறுதிப் போட்டியைத் தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாநகர காவல் துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் டாக்டர். பாலாஜி சரவணன் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

விழாவிற்கு கவுரவ விருந்தினராக கோயம்புத்தூர் சக்தி குழுமங்களின் தலைவர் டாக்டர். எம். மாணிக்கம் கலந்துகொண்டார். கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவரும், சி.ஆர்.ஐ. குழுமங்களின் இணை நிர்வாக இயக்குநருமான ஜி. செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

சு.சீனிவாசன்.     கோவை

கோவையில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கூடைபந்து இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் தென்னக ரயில்வே(சென்னை) அணியும், ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி அணியும் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றன.

கோவையில் 54வது ஆண்களுக்கான நாச்சிமுத்துகவுண்டர்  கோப்பை, மற்றும் 18வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் கடந்த 27ம் தேதி துவங்கியது. கோவையில் உள்ள வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில் அகில இந்திய அளவில் முன்னணியில் உள்ள 8 ஆண்கள் அணி மற்றும் 8 பெண்கள் அணி என மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடிது. இதன இறுதி போட்டியில் பெண்கள்
பிரிவில் தென்னக ரயில்வே சென்னை அணியை எதிர்த்து தென் மத்திய ரயில்வே செகந்தராபாத் அணி விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் பெற்றதால் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இறுதியில்
தென்னக ரயில்வே அணி 57-55 என்ற புள்ளி கணக்கில  வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற தென்னக ரயில்வே அணிக்கு ரொக்க பரிசாக 50,000 மற்றும் சி.ஆர்.ஐ சுழற்கோப்பை வழங்கபட்டது. இரண்டாம் இடம் இடம் பிடித்த தென் மத்திய ரயில்வே செகந்தராபாத் அணிக்கு 25,000 ரொக்க பரிசும் கோப்பையும் வழங்கபட்டது. இதற்கு அடுத்து நடந்த நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைகான ஆண்கள் இறுதிப் போட்டியில் வருமான வரி அணியை எதிர்த்து இந்தியன் வங்கி அணி விளையாடியது.
இதில் இந்தியன் வங்கி அணி 74-64 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கோப்பையை தட்டி சென்றது. வெற்றி பெற்ற இந்தியன் வங்கி அணிக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்க பரிசும் சுழற்கோப்பையும் வழங்கபட்டது. இரண்டாம் இடம் பிடித்த வருமான வரிதுறை அணிக்கு 50,000 மற்றும் கோப்பை வழங்கபட்டது. இறுதிப் போட்டியை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர் மாநகர காவல் துறை சட்டம் ஒழுங்கு துணை ஆணையாளர் டாக்டர்.பாலாஜி சரவணன் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவிற்கு கௌரவ விருந்தினராக கோயம்புத்தூர் சக்தி குழுமங்களின் தலைவர் டாக்டர். எம். மாணிக்கம் கலந்து கொண்டார்.கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும், சி.ஆர்.ஐ. குழுமங்களின் இணை நிர்வாக இயக்குனருமான ஜி. செல்வராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.