ETV Bharat / state

3 நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருக்கிறதா? - கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கூறும் அறிவுரை - கோவை அரசு மருத்துவர் பேட்டி

monsoon fever: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 16, 2023, 9:34 PM IST

நிர்மலா, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்

கோவை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் மழை பொழிவு அதிகமாகவே காணப்படுகிறது. இந்த சூழலில் பாக்டீரியா பரவல் காரணமாகவும், பருவநிலை மாற்றம் காரணமாகவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்குக் காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், காய்ச்சல் காரணமாகக் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவதால் அவர்களைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். கோவை அரசு மருத்துவமனையைப் பொருத்தவரை தற்போது வரை அதிகமான காய்ச்சல் நோயாளிகள் வரவில்லை.

இனி வரும் நாட்களில் தற்போது வரும் நோயாளிகளை விட ஒன்றோ, இரண்டோ சதவீதம் அதிகமாக வரலாம் எனவும், இந்த பருவமழை காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உண்டு எனவும் கூறியுள்ளார். அது மட்டும் இன்றி கூடுதலாக நோயாளிகள் வந்தால், அவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை வழங்க வேண்டும் என்ற திட்டமிடலும் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து மருத்துவர்களுக்கும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கு மருத்துவர் நிர்மலா வழங்கிய அறிவுறுத்தல்: பொதுமக்கள் அனைவரும் காய்ச்சல் குறித்தும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும், காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்டவைகளில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். மேலும், தற்போது வரும் காய்ச்சல் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் என்பதால் குழந்தைகளைப் பாதுகாப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பாக்டீரியா மற்றும் தண்ணீர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளில் இருந்தும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு காரணமாகவும் வரும் காய்ச்சலைப் பார்த்து பொதுமக்கள் அச்சப்படத் தேவை இல்லை எனவும், மூன்று, நான்கு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும், காய்ச்சல் வந்தால் கை வைத்தியம் மேற்கொள்வது, மருந்துக் கடைகளில் இருந்து மாத்திரைகளை வாங்கி உட்கொள்வது போன்ற செயல்களில் மக்கள் ஈடுபடாமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் எனவும் மருத்துவர் நிர்மலா அறிவுறுத்தியுள்ளார்.

காய்ச்சலைப் பொறுத்தவரை தற்போது வரை சாதாரணமாக 60 பேர் புற நோயாளிகளாக வருகின்றனர். அவர்களைக் கண்காணிக்க போதுமான மருத்துவர்கள் உள்ள நிலையில், தேவைப்பட்டால் கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் வீட்டைச் சுற்றி, மழை நீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அது மட்டும் இன்றி, வீடுகளில் தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும் எனவும், முழுமையான சுகாதார பின்பற்றுதல்களில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கோவை அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகள் தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.