ETV Bharat / state

சாலை போட்டதுபோல மோசடி: ஊராட்சித்தலைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு! - AIADMK leader Vimala Fraud

கோவை அருகே ஊராட்சியில் சாலை போட்டதுபோல், போலி பில் தயாரித்து மோசடி செய்ததாக ஊராட்சித்தலைவர் உள்பட 5 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறைப் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சாலை போட்டதுபோல: ஊராட்சி தலைவி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு!

author img

By

Published : Oct 19, 2022, 6:13 PM IST

கோவை: அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்தில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மன்றம் உள்ளது. ஊராட்சி மன்றத் தலைவராக அதிமுகவைச் சேர்ந்த விமலா தலைவியாகவும், திமுகவைச் சேர்ந்த வினோத்குமார் துணைத் தலைவராகவும் உள்ளனர்.

இந்த ஊராட்சி மொத்தம் 7 கிராமங்களை உள்ளடக்கிய பெரிய ஊராட்சியாகும். இந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் சாலை போட்டதுபோல் போலி பில் தயாரித்து மோசடி செய்ததாக சிக்கதாசம்பாளையம் ஊராட்சித்தலைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து லஞ்சம் ஒழிப்பு போலீசார் கூறுகையில், 'கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிக்கதாசம்பாளையம் ஊராட்சித்தலைவியாக இருப்பவர், விமலா (வயது 51). துணைத்தலைவர் வினோத்குமார்(40), காரமடை உதவி செயற்பொறியாளர் ராஜபாரதி(45), கோவை துணை கோட்ட உதவி செயற்பொறியாளர் ரமேஷ்(56), ஒப்பந்ததாரர்(40), சிக்கதாசம்பாளையம் சேரன் நகர் 2ஆவது பாலத்தில் இருந்து மகாலட்சுமி அவென்யூவரை சாலையை மேம்படுத்த ரூ.8 லட்சத்து 40 ஆயிரத்துக்கான திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டது.

சாலை அமைக்க நிர்வாக அனுமதியும் அளிக்கப்பட்டது. இந்தநிலையில் அங்கு சாலை போட்டதுபோல் பில் தயாரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சாலை பணி செய்து முடித்ததுபோல் பஞ்சாயத்து நிர்வாகம் ஆவணங்களைத் தயாரித்து பஞ்சாயத்து தலைவி, துணைத்தலைவர் கையெழுத்திட்டனர்.

சாலை போட்டதுபோல மோசடி: ஊராட்சித்தலைவி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு!

ஒப்பந்ததாரருடன் சேர்ந்து சாலை அமைத்தது போல் புகைப்படம், போலி பில் தயாரிக்கப்பட்டது. பின்னர் ரூ.8 லட்சத்து 40 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது' ஆய்வில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ஆட்டோவில் விளையாடிய குழந்தையின் தந்தையை கொலை செய்ய முயற்சித்தவருக்கு சிறை தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.