மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இன்று முழு கடையடைப்பு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோயம்புத்தூரில் 50 விழுக்காடு கடைகள் மூடிய நிலையில் 50 விழுக்காடு கடைகள் வழக்கம்போல் இயங்கின.
உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பூக்கடைகள், காய்கறிக் கடைகள் போன்றவை வழக்கம்போல் செயல்பட்டன. காவல் துறையினரும் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
அன்றாடம் பொருளாதாரத்தை ஈட்டிவரும் சிறு, சிறு கடைகள் விவசாயிகளுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும். அதே சமயம் தங்களின் வாழ்வாதாரத்தையும் பார்க்க வேண்டும் என்பதால் மத்திய அரசு உடனடியாக இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர். அதே சமயம் 90 விழுக்காடு ஆட்டோக்கள் இயங்கவில்லை.
![50 விழுக்காடு கடைகள் திறப்பு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-cbe-01-stores-close-open-visu-tn10027_08122020105759_0812f_1607405279_123.jpg)
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதத்தை தொடங்கிய அன்னா ஹசாரே