ETV Bharat / state

2 சிறுமிகளுக்கு திருமண ஆசை காட்டி கடத்திய நால்வர் கைது!

கோயம்புத்தூர்: கோவையில் திருமண ஆசை காட்டி இரண்டு சிறுமிகளை கடத்திய நான்கு பேரை காவல் துறையினர் போக்சோவில் கைது செய்தனர்.

போக்சோ
போக்சோ
author img

By

Published : Oct 23, 2020, 11:55 AM IST

கோயம்புத்தூர் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 18ஆம் தேதியன்று காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், ராமநாதபுரம் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன சிறுமியை தேடிவந்தனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் இன்பாண்ட் டேனியல் (25) என்பவருடன் சிறுமி மதுரைச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் காவல் துறையினர் மதுரைக்குச் சென்று இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இருவரும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்ததாகவும், இருவர் வீட்டிலும் பெற்றோர் சம்மதம் கிடைக்காது என்பதால், வீட்டை விட்டு வெளியேறி இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

சிறுமி மைனர் என்பதால் இந்த வழக்கு ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. காவல் ஆய்வாளர் அமுதா வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமிக்கு அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இதேபோல், கோவை போத்தனூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாகக்கூறி, அம்மன் குளத்தைச் சேர்ந்த சண்முகம் (21), அவரது நண்பர்களான கணபதியைச் சேர்ந்த அமர்நாத் (21) சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த வல்லரசு (20) ஆகியோர் உதவியுடன் சிறுமியை கடத்தியதாக மூவரையும் ராமநாதபுரம் காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்த மூவர் மீதும் ஏற்கனவே, கொலை வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது. மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.