கோயம்புத்தூர்: கிணத்துக்கடவு வடபுதூர் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் பரோடா பேங்க் அருகே வசித்து வருபவர் பஞ்சலிங்கம் (53). லாரி உரிமையாளரான இவர் நேற்று (ஜன.15) தனது வீட்டில் இருந்துள்ளார்.
அப்போது, மதியம் 1 மணியளவில் அவரது வீட்டிற்கு இன்னோவா காரில் வந்த ஐந்து டிப்டாப் ஆசாமிகள் நாங்கள் வருமான வரித்துறையிலிருந்து வருகிறோம், உங்கள் வீட்டை சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி பஞ்சலிங்கத்திடமிருந்து செல்போனை வாங்கிக் கொண்டு வீட்டை தாழிட்டு சோதனை செய்வது போல் நடித்துள்ளனர். பீரோவில் வைத்திருந்த 20 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், பரோடா வங்கி கணக்கு புத்தகம், செக் புக் ஆகியவற்றை எடுத்துக்கொண்டதுடன் சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவான ஹார்ட் டிஸ்க்யையும் திருடிச் சென்றுள்ளனர்.
பின்னர், வந்தவர்கள் டிப்டாப் மோசடி ஆசாமிகள் என்று அறிந்த பஞ்சலிங்கம் இதுகுறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
அவர்கள் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: முட்டி மோதும் மூவர்... அதிமுக மேயர் வேட்பாளர் யார்?