ETV Bharat / state

கரை ஒதுங்கிய உடல்: பட்டதாரி இளைஞர் மரணத்தில் திருப்பம் - சென்னை மாவட்ட செய்திகள்

போதை மாத்திரை விற்பனையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அவரது நண்பர்கள் கடத்தி கொலைசெய்து கடலில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இளைஞர் சடலமாக மீட்பு
இளைஞர் சடலமாக மீட்பு
author img

By

Published : Sep 8, 2021, 5:59 PM IST

சென்னை: பசுமை வழிச்சாலை அறிஞர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம் (43). இவரது மகன் மகேஷ்வரன் (25) பி.சி.ஏ. பட்டப்படிப்பு முடித்துவிட்டு பணிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றிவந்தார். இதனால் ஆத்திரமடைந்த தாய் பஞ்சவர்ணம் மகன் மகேஷ்வரனைக் கண்டித்துள்ளார்.

கடந்த 4ஆம் தேதி வீட்டின் மேல் அறையில் தூங்கச் செல்வதாகக் கூறி சென்ற மகேஷ்வரன் காணாமல்போனார். இதனால் பதற்றமடைந்த தாய் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் மகன் கிடைக்கவில்லை.

பின்னர் பஞ்சவர்ணம் காணாமல்போன மகனை கண்டுபிடித்துத் தருமாறு அபிராமபுரம் காவல் நிலையத்தில் கடந்த 5ஆம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேஷ்வரனைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.

நேற்று (செப். 7) பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை மணற்பரப்பில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைப் பார்த்து பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் பட்டினம்பாக்கம் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

கடந்த சில நாள்களில் சென்னையில் காணாமல்போன 25 வயதுடையவர்கள் குறித்த தகவல்களை காவல் துறையினர் சேகரித்தனர். அதில் அபிராமபுரம் காவல் நிலைய எல்லையில் காணாமல்போன மகேஷ்வரனின் உடல் என அடையாளம் காணப்பட்டது.

அவரது தாய் பஞ்சவர்ணம் நேரில் வந்து அடையாளம் காண்பித்ததை அடுத்து சடலம் காணாமல்போன மகேஷ்வரன் என்பது உறுதியானது. இதனைத் தொடர்ந்து மகேஷ்வரன் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலைசெய்யப்பட்டரா போன்ற கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.

நேற்று மதியம் (செப். 7) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடுவர் முன்பு ஆஜரான கார்த்திக் (25) என்பவர் மகேஷ்வரனை அடித்து கொன்றுவிட்டு உடலை கடலில் போட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளார். உடனே நடுவர் சிறிது நேரம் வெளியே நிற்குமாறு கார்த்திக்கிடம் கூறினார். வெளியே வந்த கார்த்திக் அங்கிருந்து திடீரென காணாமல்போனார். இத்தகவலின் பேரில் சைதாப்பேட்டை காவல் துறையினர் கார்த்திக்கை தீவிரமாகத் தேடி கைதுசெய்தனர்.

விசாரணையில் கார்த்திக் கூறியதாவது, "மகேஷ்வரன் என்னுடன் பழகியதால் போதைக்கு அடிமையாகினார். போதை மாத்திரைகளை வாங்கி சப்ளை செய்யும் தொழிலை மகேஷ்வரன் தனியாகச் செய்துவந்தார். எங்கிருந்து மாத்திரைகள் வாங்கி விற்பனை செய்கிறார் எனக் கேட்டதற்கு மகேஷ்வரன் தகவல் கூற மறுத்தார்.

இதன் காரணமாக எனது நண்பர்கள் ஐந்து பேருடன் அவரது வீட்டிற்குச் சென்று போதை மாத்திரை வாங்கும் கடையைக் கேட்டு அடித்து கத்தியால் குத்தினோம். அதில் மகேஷ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். வேறு வழியின்றி மகேஷ்வரனை பட்டினம்பாக்கம் கடற்கரையில் வீசி சென்றோம்" என்றார்.

கார்த்திக் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மற்றொரு நண்பரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். தலைமறைவாக உள்ள நபர்களைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: 14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த ஓட்டுநர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.