ETV Bharat / state

ஒரே புடவையில் தூக்கிட்டு இளம் தம்பதி தற்கொலை - கரோனா ஊரடங்கு

சென்னை: தாம்பரம் அருகே ஒரே புடவையில் மேற்கு வங்க தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

young-west-bengal-couple-committing-suicide

author img

By

Published : May 30, 2020, 7:39 PM IST

சென்னை தாம்பரம் அருகே உள்ள மப்பேடு பகுதியில் இளம்தம்பதி ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சேலையூர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர்.

காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்டுள்ள தம்பதி கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பிழப்பு தேடி சென்னைக்கு வந்துள்ளனர். அவர்கள் வந்த அடுத்த நாளே நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உடல்களை மீட்ட போது

அதனால் தம்பதி வேலை, பணம், உணவில்லாமல் தவித்துவந்துள்ளனர். மார்ச் மாதத்திலிருந்து இன்று வரை எப்படியோ காலத்தை கடத்தி வந்த அவர்கள், நேற்று (மே 29) மாலையிலிருந்து வீட்டைவிட்டு வெளியேறவில்லை. அதையடுத்து இன்று காலை அக்கம்பக்கத்தினர் தூர்நாற்றம் வீசியதன் காரணமாக, அவர்களின் வீட்டைத்திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது தம்பதி ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதை அறிந்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் தம்பதியின் பெயர், விவரங்கள் தெரியவில்லை என்பதால் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: ஸ்மார்ட் போன் வாங்கி தர மறுத்த கணவர் - மனைவி தீக்குளித்து தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.