சென்னை: பல்லாவரம் வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலமுருகன் - விமலா தம்பதியினரின் மூத்த மகள் ஹேமிதா. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் ஹேமிதா அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் சிறு வயதிலிருந்து படித்து வந்து உள்ளார். 9-ஆம் வகுப்பு படிக்கும் போது டியூஷன் மாஸ்டர் அஜய் (வயது 26) என்பருக்கும் ஹேமிதாக்கும் நட்பு ஏற்பட்டு உள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியது.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர படிக்கும் வயதில் காதல் எதற்கு என ஹேமிதாவை கண்டித்தாதக தெரிகிறது. அதன் பிறகு ஒரு சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு சென்று கொண்டு இருக்கும் போது மீண்டும் அஜய், ஹேமிதாவும் நேரில் சந்தித்து தங்களது காதலை தொடர்ந்து கொண்டிருந்தனர்.
ஹேமிதா பயன்படுத்தி இருந்த செல்போனையும் அவரின் பெற்றோர் வாங்கிக் கொண்டதால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் தன் காதலிக்கு புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், கடந்த 27-ஆம் தேதி ஹேமிதா வீட்டில் அனைவரும் தூங்கியப் பின் காலையில் எழுந்து ஹேமிதாவை பார்த்த போது அவரைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஹேமிதாவை அக்கம்பத்தில் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் அருகில் உள்ள பல்லாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பல்லாவரம் போலீசார் ஹேமிதாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரயில்வே போலீசாருக்கு, குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே ஒரு இளம்பெண்ணின் சடலம் கிடப்பதாக தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் அவர் ஹேமிதா என்பது தெரிய வந்தது. அதன் பின் ஹேமிதாவின் உடல் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் ஹேமிதா வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்த நேரத்தில் அதிகாலை நேரத்தில் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே தற்கொலை செய்துக்கொண்டது தெரிய வந்தது. இளம்பெண் ஹேமிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக இறப்பிற்கு அவரது காதலன் தான் காரணம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: Chennai Police Encounter: சென்னை அருகே போலீஸ் என்கவுண்டரில் 2 ரவுடிகள் உயிரிழப்பு!