யமஹா ஃபேசினோ 125 (fascino), ரே (Ray) 125 ஆகிய இரண்டு மாடல்களை யமஹா மோட்டர்ஸ் இந்தியா குழுமத்தின் தலைவர் மோடோஃபுமி சிட்டாரா (Motofumi shitara), இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் அறிமுகம் செய்துவைத்தனர்.
புதிய ஃபேசினோ 125 மாடலின் விலை ரூ.66 ஆயிரத்திலிருந்து தொடங்குகிறது. இதில் டிகஸ்க் பிரேக், டிரம் பிரேக் என இரண்டு பிரேக்குகளுடனும் பல்வேறு நிறங்களிலும் வருகிறது. முந்தைய 110 சிசி இன்ஜினைவிட இந்த புதிய இன்ஜின் 30 சதவிகிதம் அதிகத்திறன் வாய்ந்தது என்றும் 16 சதவிகிதம் வரை எரிபொருளை சிக்கனப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யமஹா ரே வரிசையில் இசட்ஆர், இசட்ஆர் ஸ்ட்ரீட் ராலி ஆகிய மாடல்கள் இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. முந்தைய 113 சிசி இன்ஜினுக்குப் பதிலாக ஃபியூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய புதிய 125 சிசி இன்ஜின் இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தப் புதிய மாடல்கள் சுற்றுச்சூழலுக்கு மாசைக் குறைக்கும் வகையில் மத்திய அரசின் உத்தரவுக்கு ஏற்ப பிஎஸ்- 6 தரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டில் வாகனம் வாங்கும் மக்கள் ஸ்கூட்டர்களையே அதிக அளவு விரும்புகிறார்கள் என்று சொன்ன மோடோஃபுமி சிட்டாரா, இதனால் சொகுசு வசதிகளுடன் கூடிய ஸ்கூட்டர்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர் என்றார். அதே நேரத்தில் தங்களது பலம்வாய்ந்த ஸ்போர்ட்ஸ் செக்மென்டிலும் கவனம் செலுத்திவருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிக்க: ஜாகுவார் லேண்ட் ரோவர் காரின் விற்பனை சரிவு!