ETV Bharat / business

ஜாகுவார் லேண்ட் ரோவர் காரின் விற்பனை சரிவு!

சொகுசு கார் நிறுவனமான ஜாக்குவார் லேண்ட் ரோவரின் விற்பனை 3.4 சதவிகிதம் சரிவடைந்துள்ளது.

Jaguar Land rover
Jaguar Land rover
author img

By

Published : Dec 10, 2019, 8:14 AM IST

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover), விற்பனையில் கடும் சரிவை சந்தித்துள்ளதாக கடந்த மாதம் அறிவித்தது.

பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஜாகுவார் நிறுவனம், அக்டோபர் மாத விற்பனையில் ஆறு சதவிகிதம் சரிவைச் சந்தித்தது. இதையடுத்து, சீனாவில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் விற்பனை உயரும் என நம்புவதாக அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஃபெளிக்ஸ் ப்ருதிகம் (Felix Brautigam) தெரிவித்திருந்தார்.

மும்பை பங்குச்சந்தையில் டாடா மோட்டார்ஸ் தாக்கல் செய்த அறிக்கையில், ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் மொத்தம் 11 ஆயிரத்து 464 ஜாக்குவார் கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதன் விற்பனை 23 சதவிகிதம் குறைவாகும். மேலும் நவம்பர் மாத விற்பனையில் 3.4 சதவிகிதம் சரிவடைந்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனையில் 6 விழுக்காடு சரிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.