ETV Bharat / state

பக்ரைனில் சிக்கி தவிக்கும் பெண்களை மீட்டுத் தரவேண்டும் - குடும்பத்தினர் கோரிக்கை! - வெளிநாட்டு வேலை

வேலைக்காக சென்று பக்ரைனில் சிக்கித் தவிக்கும் தவிக்கும் பெண்களை மீட்டுத்தரும் படி அப்பெண்களின் குடும்பத்தினர் துணை ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

பக்ரைனில் சிக்கி தவிக்கும் பெண்கள்
பக்ரைனில் சிக்கி தவிக்கும் பெண்கள்
author img

By

Published : Jul 7, 2021, 9:21 PM IST

சென்னை: புதுவண்ணாரப்பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர்கள் வேளாங்கண்ணி (32), வடிவுக்கரசி (38), வள்ளி (35). இவர்கள், அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இதில், வேளாங்கணிக்கு திருமணமாகி 2 மகள்களும், வடிவுக்கரசிக்கு திருமனமாகி 3 மகன்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் தங்களது கணவர்களைப் பிரிந்து, குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்தனர். வள்ளியும் கணவரை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தார்.

தங்களது கணவன்களைப் பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வந்த 3 பெண்களும் குடும்பம் நடத்த சிரமப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டிற்கு சென்றால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்தில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த டிராவல் ஏஜென்சியை அணுகியுள்ளனர்.

வீட்டு வேலைக்குச் சென்ற பெண்கள்

அந்த டிராவல் ஏஜென்சியின் வழிகாட்டுதல் படி பாஸ்போர்ட் எடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் கரோனா பரிசோதனைகள் அனைத்தும் முடித்து பக்ரைன் நாட்டிற்கு, வீட்டு வேலைக்காக 3 பெண்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில் வேலைக்கு சென்று 4 மாதங்களுக்கு மேலாக ஆன நிலையில், வேலைக்கு சென்ற இடத்தில் அடித்து துன்புறுத்துவதாகவும், உணவு கொடுக்காமல் கஷ்டப்படுத்துதாகவும், தங்களை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என பக்ரைன் நாட்டு ஏஜென்சியில் கேட்டதற்கு, ரூ.2 லட்சம் பணம் கொடுத்தால் அனுப்புவதாக சொன்னதாகவும் சென்னையில் உள்ள தங்களது குடும்பத்தாருக்கு செல்போன் மற்றும் வாட்ஸ் அப் பதிவு மூலமாக பெண்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மீட்டுத்தர குடும்பத்தினர் கோரிக்கை

இந்நிலையில், தங்கள் வீட்டுப் பெண்களின் நிலைகுறித்து தகவலறிந்த சென்னையில் உள்ள குடும்பத்தினர் பக்ரைன் நாட்டில் சிக்கியுள்ள 3 பேரையும் மீட்டு தருமாறு வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் அலுவலகத்தில் கோரிக்கை அளித்தனர்.

அதனைப் பெற்று கொண்ட காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பக்ரைனில் சிக்கியுள்ள பெண்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஊர் பெண்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்ட இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.