சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா, விசாகன் என்ற தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். விசாகனின் தந்தை வணங்காமுடி அபெக்ஸ் லேபரட்டரி என்ற பிரபல நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இந்த நிறுவனத்தின் மற்றொரு பங்குதாரர் முரளி ஸ்ரீனிவாசன். இவர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் முரளி சீனிவாசனின் இரண்டாவது மனைவி எனக் கூறி சத்தியபாமா என்ற பெண் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதில், ஸ்ரீனிவாசனின் இரண்டாவது மனைவியாக யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருவதாகவும், தனக்கும் சீனிவாசனுக்கும் எட்டு மாத குழந்தை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கணவனை மீட்கக்கோரி புகார்
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் கணவர் உடல்நிலை சரியில்லாமல் ஹைதராபாத்திற்கு சிகிச்சை பெற சென்றதாகவும், தற்போது தனது கணவரின் உடல்நிலை பற்றியும், அவரைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை என்றும், இதனால் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகர் ரஜினிகாந்தின் சம்பந்தியுமான வணங்காமுடியிடம் தான் விசாரித்ததாகவும், அப்போது வணங்காமுடி தனக்கு உதவி செய்வதாக கூறியதாகவும், அதேநேரத்தில் தனது கணவரின் முதல் மனைவியின் வீட்டுக்கு சென்றபோது அவர் தன்னை அடித்து விரட்டிய தாகவும் கூறியுள்ளார்.
மேலும், நிறுவனத்தின் உரிமையாளர் வணங்காமுடி ஆரம்பத்தில் உதவுவதாக கூறினாலும், தற்போது தன்னை வழக்கறிஞர் ஒருவர் மூலம் மிரட்டி வருகிறார் என்றும் அந்தப் பெண் புகாரில் தெரிவித்துள்ளார். தனது கணவர் முரளி சீனிவாசனை சொத்துக்காகவும், அல்லது ரகசிய ஆவணங்கள் பெறுவதற்காகவும், வணங்காமுடி அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
![actor rajinikanth women complaint on actor rajinikanth relativ mplaint on actor rajinikanth relative chennai news chennai latest news rajinikanth relative sondhariya father in law ரஜினிகாந்தின் சம்பந்தி ரஜினிகாந்தின் சம்பந்தி மீது புகார் ரஜினிகாந்தின் சம்பந்தி மீது பெண் ஒருவர் புகார் சென்னை செய்திகள் சென்னையில் ரஜினிகாந்தின் சம்பந்தி மீது பெண் ஒருவர் புகார் சௌந்தரியா மாமனார் மீது புகார்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-10-rajinisammandhi-script-7202290_25102021234506_2510f_1635185706_753.jpg)
அதேநேரத்தில் தனது கணவரை எங்கு வைத்துள்ளார்கள் என்பதை கூற மறுப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தன் கணவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தனக்கு தெரிய வேண்டும் எனவும், தன்னை மிரட்டிவரும் வணங்காமுடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரஜினிகாந்தின் சம்பந்தியான வணங்காமுடியைப் பற்றி எந்த ரகசியத்தையும் தனது கணவர் தன்னிடம் கூறவில்லை எனவும், தனக்கும் தன் குழந்தைக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் அதில் கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'அவரது கருத்துகள் என்னை புண்படுத்தின' - நடிகர் விஜய்