சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கற்பகம் (23), அலெக்ஸ் ஆகிய இருவரும் சிவகங்கையில் உள்ள கல்லூரியில் பொறியியல் பயின்றபோது நட்பாகி பின்னர் நெருக்கமாகினர். நாளடைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கடந்த முன்னர் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மணிமங்கலம் அருகே உள்ள வாடகை வீட்டில் தங்கி இருந்தனர். அலெக்ஸ் அதே பகுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று காலை (டிச.15) கற்பகம் நீண்ட நேரமாக அவரின் தாயிடம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த அலெக்ஸ், செல்போனை வாங்கி கீழே போட்டு உடைத்தார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதன் பின்னர் அலெக்ஸ் வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பி சென்றார். மதிய உணவு இடைவேளையில் வீட்டிற்கு வந்த அலெக்ஸ் கதவை திறக்க முயற்சித்தபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அவரது மனைவி கற்பகம் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக மணிமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த மணிமங்கலம் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அலெக்ஸை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனிடையே கற்பகம் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, இன்று காலை (டிச.15) சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த கற்பகத்தின் குடும்பத்தினர், திருமணமாகி 45 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தை திருடும் அடையாளம் தெரியாத நபர்கள்: சிசிடிவி காட்சிகளை சமர்பித்து புகார்