சென்னை: ஆவடி ரயில் நிலையத்தில் பெண் ஒருவரது உடல் கிடப்பதாக ஆவடி ரயில்வே காவல் நிலையத்திற்கு நேற்று (ஜனவரி 26) தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே காவல்துறையினர், உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக விசாரணையை தொடங்கினர்.
முதல்கட்ட விசாரணையில் அந்தப் பெண், திருமுல்லைவாயில், வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீபிரியா (42) என்பதும், இவர் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமை காவலராக பணியாற்றி வந்ததும் தெரிய வந்தது. இவர் திருமணம் ஆகாத நிலையில் தாய் தந்தையுடன் வசித்து வந்ததாகவும், அண்மையில் அவர்கள் காலமானதை அடுத்து தனியாக வசித்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
கடந்த ஒரு சில மாதங்களாக தனியாக வசித்து வந்த ஸ்ரீபிரியா, மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீப்ரியா உயிர் இழந்து இருப்பது தற்கொலையாக கூட இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையும் படிங்க: பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதல் ஜோடி தற்கொலை!