ETV Bharat / state

'இந்திய ராணுவத்தை தலை நிமிரவைப்போம்' - ஜெயக்குமார் - Jayakumar is a retired Air Force veteran

சென்னை: கல்லூரி மாணவர்கள், விமானப்படை நண்பர்களின் உதவியோடு ராணுவ தளவாடங்களை தயாரித்துவரும் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் ஜெயக்குமார் பற்றிய ஒரு சிறப்பு பார்வை.

jeyakkumar
jeyakkumar
author img

By

Published : Jan 26, 2020, 5:33 PM IST

Updated : Jan 26, 2020, 7:07 PM IST

இந்திய பாதுகாப்புத் துறை தொழில்நுட்ப வளர்ச்சியால் நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றிக்கொண்டே வருகிறது. இதன்மூலம் எல்லைப் பாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு , நீர்வழிப் பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டுவருகிறது.

இவற்றுக்குத் தேவையான ராணுவ தளவாடங்களை பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வெளிநாடுகளில் வாங்கிய நிலை மாறி மத்திய அரசின் திட்டங்கள் மூலம் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஓய்வுபெற்ற விமானப்படை வீரர் கல்லூரி மாணவர்களைக்கொண்டு ராணுவ தளவாடங்களைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.

தஞ்சையைச் சேர்ந்த ஜெயக்குமார் 28 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்திற்கான 'ஸ்டார்ட் அப்' நிறுவனத்தை நடத்திவருகிறார். இதன்மூலம் பல்வேறு கருவிகளை உற்பத்திசெய்து பாதுகாப்புத் துறைக்கு வழங்கிவருகிறார்.

இது குறித்து ஜெயக்குமார் நமது ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியிருப்பதாவது:

புதிய ராணுவ தளவாடங்களை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் தளவாடங்களை பாதுகாப்பது என்ற நிர்பந்தம் நமக்கு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தளவாடங்கள் வாங்கிய நிலைமாறி 'மேக் இன் இந்தியா' எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் மூலம் நமக்கு தேவையான கருவிகளை நமது நாட்டிலேயே தயாரிக்க முடிகிறது. நான் பணியிலிருந்தபோது மாணவர்கள், பேராசிரியர்கள், விமானப்படை நண்பர்கள் உதவியுடன் பயிற்சி ஏவுகணை தொழில்நுட்ப கருவியை ஒரு வருடத்தில் தயாரித்து வழங்கினோம்.

இதன்மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. இந்தத் தொழில்நுட்பம் மூலம் ஒரு சிறிய ரக ஏவுகணையையே உருவாக்க முடியும். பணி ஓய்வுக்குப் பிறகு என்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், கல்லூரி மாணவர்களைக் கொண்டு என்னுடைய 'என்ரூட்' நிறுவனம் மூலம் தளவாட சாதனங்களைத் தயாரிக்கிறோம்.

மாணவர்களின் பங்களிப்பு

மாணவர்கள் பங்களிப்புடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் தோளில்வைத்து இயங்கக்கூடிய சிறிய ரக ஏவுகணைகளை தயாரிக்கின்றோம். இந்த ஏவுகணை மூலம் வானில் பறக்கக்கூடிய விமானங்களைத் தரையிலிருந்தே தாக்க முடியும். பல ஆயிரம் கோடிகளை மீட்டு தந்துள்ள இந்தத் தொழில்நுட்பத்துக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளோம். பேராசிரியர்கள், மாணவர்கள், விமானப்படை நண்பர்கள் ஆகியோரது உதவியுடன் தொடர்ந்து ராணுவம், விமானப்படை ஆகியவற்றுக்கும் தளவாடங்கள் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய ராணுவம் குறித்து தெரிவிக்கும் ஜெயக்குமார்

ராணுவ தளவாடத்தால் ஏற்படும் நன்மை

தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் அமையவுள்ளன. இதில் பல்வேறு உற்பத்தி மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவை ஏற்படுத்தப்படவுள்ளன. இதன்மூலம் எங்களைப் போன்ற ஸ்டார்ட் அப் மையங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. டச் ஸ்கிரீன், எல்இடி ஸ்கிரீன் ஆகியவை ஏற்கனவே ராணுவத்தில் உள்ளது. ஆனால் தற்போதுதான் வெளியே வருகிறது. எங்களைப் போன்ற வீரர்களுக்கு எம்.டெக். பட்டதாரியின் திறமை உண்டு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'எங்ககிட்ட சரக்கு இருக்கு' - வாசலில் ஆள் நிறுத்தி மது விற்பனையில் ஈடுபட்ட உணவகத்தினர்!

Intro:Body:visual sent by Mojo kit no:55

இந்திய பாதுகாப்பு துறை தொழில்நுட்ப வளர்ச்சியால் நாளுக்கு நாள் தன்னை வளர்த்துகொண்டே வருகிறது. இதன் மூலம் எல்லை பாதுகாப்பு, வான்வெளி பாதுகாப்பு மற்றும் நீர் வழி பாதுகாப்பு ஆகியவை உறுதி செய்யப்பட்டு வருகிறது. இவற்றுக்கு தேவையான ராணுவ தளவாடங்களை பல்லாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வெளிநாடுகளில் வாங்கி வந்தோம். ஆனால் தற்போது மத்திய அரசின் திட்டங்கள் மூலம் உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் கல்லூரி மாணவர்களை கொண்டு ராணுவ தளவாடங்களை தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

தஞ்சையை சேர்ந்த ஜெயக்குமார் 28 வருடங்கள் இந்திய விமானப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்துக்கான ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் பல்வேறு கருவிகளை உற்பத்தி செய்து பாதுகாப்பு துறைக்கு வழங்கி வருகிறார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் ஜெயக்குமார் நம்மிடையே பேசுகையில்,

புதிய ராணுவ தளவாடங்களை உருவாக்குவது, ஏற்கனவே இருக்கும் தளவாடங்களை பாதுகாப்பது என்ற நிர்பந்தம் நமக்கு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தளவாடங்கள் வாங்கிய நிலை போய் தற்போது 'மேக் இந்த இந்தியா' திட்டத்தின் மூலம் நமக்கு தேவையான கருவிகளை நாங்களே தயாரிக்க முடிகிறது. நான் பணியில் இருந்த போது மாணவர்கள், பேராசிரியர்கள், விமானப்படை நண்பர்கள் உதவியுடன் பயிற்சி ஏவுகணை தொழில்நுட்ப கருவியை ஒரு வருடத்தில் தயாரித்து வழங்கினோம். இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் ஒரு சிறிய ரக ஏவுகணையையே உருவாக்க முடியும். பணி ஓய்வுக்கு பிறகு என்னுடைய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை கொண்டு என்னுடைய 'என்ரூட்' நிறுவனம் மூலம் தளவாட சாதனங்களை தயாரிக்கிறோம். இதன் மூலம் மாணவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப கல்வி கிடைப்பதால் அவர்களால் பெரிய நிபுணராக வரமுடிகிறது என்றார்.

மாணவர்கள் பங்களிப்புடன் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் தோளில் வைத்து இயங்கக்கூடிய சிறிய ரக ஏவுகணைகளை இவர் தயாரித்து வருகிறார். இந்த ஏவுகணை மூலம் வானில் பறக்க கூடிய விமானங்களை தரையில் இருந்தே தாக்க முடியும். இதற்கான தொழிநுட்பத்தை ஜெயக்குமார் வழங்கி வருகிறார். இத்தகைய தொழில்நுட்பத்தை வெளிநாடுகளில் இருந்து தான் நாம் இறக்குமதி செய்து வந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆயிரம் கோடிகளை மீட்டு தந்துள்ள இந்த தொழில்நுட்பத்துக்கு காப்புரிமையையும் பெற்றுள்ளார் ஜெயக்குமார். பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் விமானப்படை நண்பர்கள் ஆகியோரது உதவியுடன் தொடர்ந்து ராணுவம், விமானப்படை ஆகியவற்றுக்கும் தாளவாடங்கள் தயாரிப்பதற்கான வேளையில் இவர் இறங்கியுள்ளார்.

தமிழகத்தில் 5 இடங்களில்ராணுவ தளவாட உற்பத்தி மையங்கள் அமையவுள்ளது. இதில் பல்வேறு உற்பத்தி மையங்கள், ஆய்வகங்கள் ஆகியவை அமைய உள்ளது. இதன் மூலம் எங்களை போன்ற ஸ்டார்ட் அப் மையங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. 'defense corridor' என்பது ராணுவத்துக்கு மட்டும் அல்ல, ஒவ்வொரு தொழில்நுட்பமும் நமக்கு பயன்படும். ராணுவத்தின் உதிரி பாகங்களை கொண்டு தான் செயற்கை கால் கண்டுபிடித்தோம் என்று மறைந்த அப்துல்கலாம் கூறுவார். டச் ஸ்கிரீன், எல் இ டி ஸ்கிரீன் ஆகியவை ஏற்கனவே ராணுவத்தில் உள்ளது. ஆனால தற்போது தான் வெளியே வருகிறது. எங்களை போன்ற வீரர்களுக்கு எம் டெக் பட்டதாரியின் திறமை உண்டு என்கிறார்.

மேலும், தென் தமிழகத்தில் ராணுவ தளவாட மையங்கள் விமான படை மையங்கள் ஆகியவை அதிகரித்து வருகிறதே என்ற கேள்விக்கு, அரசு இதை தொலைநோக்கு திட்டத்தின் மூலமே முடிவெடுத்து செய்துள்ளது. அண்டை நாடுகள் அச்சுறுத்தலில் இருந்து நம்மை காக்கவே தஞ்சை உள்ளிட்ட இடங்களில் விமான படை மையம் நமக்கு தேவைப்படுகிறது. மேலும், தென்னிந்தியாவில் விமான படை தளம் எதுவும் இல்லை. தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் மற்றவர்களும் நம்மை தாக்க முடியும், நாமும் மற்றவர்களை தாக்க முடியும். இதற்காகவே விமான படை தளம் தஞ்சையில் அமைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்.Conclusion:
Last Updated : Jan 26, 2020, 7:07 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.