சென்னை செம்பியம் போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ஐ.அருள் என்பவர் கடந்த மே 6ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த கே.ஆர் பாலாஜி என்பவர் கடந்த மே 7ஆம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
மேலும் சிட்லபாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த கே.சுரேஷ்குமார் என்பவர் கடந்த மே 1ஆம் தேதி கரோனா தொற்றுக்கு பலியானார்.
இதில், சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு உயிரிழந்தோரின் புகைப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.