ETV Bharat / state

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதால் தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தின் நிலை என்னவாகும்? - பரந்தூர் சென்னை விமான நிலையம்

பரந்தூரில் அமையவுள்ள புதிய விமான நிலையத்தால், தற்போதைய நடப்பு விமான நிலையத்தில் மாறப்போகும் சில மாற்றங்கள் குறித்து விளக்குகிறது, இந்த கட்டுரை

தற்போதைய சென்னை விமான நிலையத்தில் மாறப்போகும் புதிய மாற்றங்கள் என்ன..?

author img

By

Published : Aug 30, 2022, 10:47 PM IST

சென்னை: இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் சென்னை விமான நிலையமும் ஒன்று. சென்னையில் உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளுக்குச்செல்லும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் விமானங்கள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், இடநெருக்கடியை சமாளிக்க சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நான்கு இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் விளை நிலங்கள், தொழிற்சாலைகள், மக்கள் வசிக்கும் பகுதிகள், நிலத்தை கையகப்படுத்த ஆகும் செலவு என பல்வேறு அம்சங்களை ஆய்வுசெய்தனர்.

இதையடுத்து, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் மக்களவையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளதாக அறிவித்தார். பின்னர், இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் புதிதாக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையம் 10 கோடி பயணிகளை கையாளக்கூடிய திறன் உடையதாக அமைய உள்ளதாகத்தெரிவித்துள்ளது.

மேலும், புதிய விமான நிலையம் அமைக்கத் திட்ட மதிப்பு 40 ஆயிரம் கோடி ரூபாய் உத்தேசப்பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முழு ஆய்வுகளையும் மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்த பின், மதிப்பு இறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக அமையும் விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளங்கள், விமான முனையங்கள், இணைப்புப் பாதைகள், விமானங்கள் நிறுத்தும் இடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்புப் பகுதிகள், மேலும், இதர தேவைகள் உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய விமான நிலையம் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும், புதிய விமான நிலையம் சென்னை விமான நிலையத்திலிருந்து 59 கிலோமீட்டர் தொலைவிலும்,சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில், பரந்தூர் விமான நிலையம் செயல்பாட்டிற்கு வந்தால் தற்போது உள்ள சென்னை விமான நிலையத்தின் நிலை என்னவாகும் என்னென்ன மாற்றங்கள் செய்யப்படும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது.

இதுகுறித்து ஓய்வு பெற்ற சென்னை விமான நிலைய அலுவலர் சி.மோகன் கூறுகையில், “சென்னை அருகே இரண்டாவது விமான நிலையம் அமைவதால் தற்போது உள்ள விமான நிலையம் என்னவாகும் எனப் பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

சென்னையில் பன்னாட்டு முனையமும், பரிந்துரையில் அமையும் புதிய விமான நிலையத்தில் உள்நாட்டு முனையமும் தனித்தனியாக செயல்பட சாத்தியமே இல்லை. இரண்டு முனையங்களும் ஒரே விமான நிலையத்தில் தான் செயல்பட வேண்டும்.

இதனால் 20 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை விமான நிலையம் தனிநபர்கள் பயன்படுத்தும் சிறியரக விமானங்களைப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யலாம். மேலும், முக்கியத் தலைவர்கள் வரும் வி.ஐ.பி பகுதியாக மீனம்பாக்கம் விமான நிலையம் விளங்கும். பெங்களூருவிலும், ஹைதராபாத் நகரின் பேகும்பேட்டிலும் உள்ள எச்ஏஎல் போன்று தனியார் ஜெட்களுக்காக மீனம்பாக்கம் விமான நிலையம் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைவதால் தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தின் நிலை என்னவாகும்?

மேலுன், மீனம்பாக்கம் விமான நிலையம் பைலட் பயிற்சி அளிக்கவும், பிஸினஸ் ஜெட்களை கையாளவும், இந்திய ராணுவம் பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளது. பரந்தூரில் அமைக்கும் புதிய விமான நிலையத்தால் பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடும். நிச்சயமாக இரண்டு விமான நிலையங்களும் ஒன்றாக இயங்க வாய்ப்பு இல்லை. பரந்தூர் புதிய விமான நிலையம் பயணிகளுக்காகவும், இது மற்ற சேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படும்” இவ்வாறு கூறினார்.

இந்நிலையில், புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்க பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத்தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சென்னை அண்ணாசாலை அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புதிய சிலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.