'மீனவர்கள் இரு தினங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம்!' - வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தென்மேற்குப் பருவமழை கேரளா, கர்நாடகப் பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாக உள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்குப் பருவக்காற்று வலுவான நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மோதி வீசக்கூடிய நிலை தொடர்கிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு மலைப் பகுதிகள் அடங்கிய நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை தொடரும். தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட இதர மாவட்டங்கள், தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சில் 91 செ.மீ. மழையும் மேல் பவானியில் 45 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அடுத்துவரும் இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அடுத்து இரு தினங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை லேசான முதல் மிதமான மழை பெய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மதுரை - 09.08.19
அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மைய தலைவர் பாலசந்தரன்..
சென்னை வானிலை மைய தலைவர் பாலச்சந்திரன் பேட்டியளித்த போது,
அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..
தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் தொடர்ந்து தீவிரமாக உள்ளது. ஈரப்பதத்துடன் கூடிய தென்மேற்கு பருவக்காற்று வலுவான நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மோதி வீசக்கூடிய நிலை தொடர்கிறது..
இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை பகுதிகள் அடங்கிய மாவட்டங்களான நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்.
தமிழகம் மற்றும் புதுவையில் இதர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவளாஞ்சில் 92 செ.மீ மழையும் மற்றும் மேல் பவானியில் 45 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கையை பொருத்தவரையில், அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை கடற்கரை பகுதிகளில் பலத்த காற்றானது பணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், மீனவர்கள் அடுத்து இரு தினங்களுக்கு தமிழக கடற்கரை பகுதிகளில் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்..
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை ஒரு முறை லேசான முதல் மிதமான மழை பெய்து என தெரிவித்தார்..
tn_che_01_weather_status_balachandran_byte_script_7204894Conclusion: