இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் பள்ளி மாணவ , மாணவியர் விடுமுறைக்குப் பின்னர் , புதிய கல்வியாண்டு தொடங்கி உள்ள நிலையில் பள்ளிகளில் சுற்றுப்புற சுகாதாரம் , குடிநீர் வசதி , தூய்மையான கழிவறைகள் ஆகியவற்றை சரிவர பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டுமென்று அறிவுறுத்துவதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள கூடங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் முழுமையாக இருந்தால் தான் , அங்கு கற்றல் கற்பித்தல் ஆகிய இரண்டும் முறையாக நடைபெறும் . எனவே , கட்சி சார்பற்ற முறையில் ,அனைத்து சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோர் அவர்களது பகுதிகளிலுள்ள பள்ளிகளை அவ்வப்போது பார்வையிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது ஏதேனும் குறைபாடுகளைக் கண்டறிந்தால், அவற்றை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் மற்றும் துறை அலுவலர்களிடம் தெரிவித்து அவற்றை களைவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
மாணவச் செல்வங்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் பள்ளிகளில் உள்ள கழிவறை தொட்டிகள் மூடி இருப்பதையும் அதே போன்று குடிநீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு சுத்தமான குடிநீர் வழங்கப் படவேண்டும் என்பதையும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், பெற்றோர் , ஆசிரியர் கழகங்கள் கவனிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: பள்ளிகள் திறப்பு: கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும் - மாணவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து..