நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைதேர்தல் குறித்து அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சென்னை கமலாலயத்தில் நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன்,
'கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து கூட்டணியாக தேர்தலை சந்தித்தது. அதேபோல நடைபெறவிருக்கின்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களிலும் பாஜக, அதிமுகவிற்கு முழு ஆதரவு அளிக்கவுள்ளது. குறிப்பாக நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைதேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய பாஜக தீவிரமாக பணியாற்ற உள்ளது
அதனடிப்படையில், அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தமிழ்நாடு பாஜக ஆதரவு குறித்தும்; எந்த எந்த தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு வரவிருக்கின்றார்கள் என்பது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த வந்தார்.
மேலும், பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தது. இடைத்தேர்தலில் பாஜக தலைவர்களின் பிரசாரம் குறித்து கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும்' எனப் பேசினார்.
இதையும் படிங்க:
'நன்றி மறந்தவன் தமிழன்...!' - பொன். ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு