மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தென் சென்னை வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சென்னை சைதாப்பேட்டையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு சிறந்த எழுத்தாளர். இப்படிப்பட்டவர் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்கிற ஸ்டாலினின் முடிவை எண்ணி மெச்சுகிறேன்.
தமிழகத்தில் இந்த ஊழல் ஆட்சி போக்கப்பட்டு, வேலைவாய்ப்பின்மை நீக்கப்பட்டு, பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா, எய்ட்ஸ் பாதித்த இரத்ததை கர்ப்பிணிக்கு ஏற்றினாகளே. எனவே இந்த அவலஙௌகளை போக்க, உங்கள் வருங்கால சந்ததியின் நலனை கருதி உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.
இந்து முஸ்லிம் ஒற்றுமையை பற்றி பேசியதால் காந்தியை சுட்டுக் கொன்றனர். இன்றுவரை சுட்டுக் கொள்கின்றனர்.
புல்வாமா தாக்குதல் மூலம் சரிந்து கொண்டிருந்த எங்கள் பலத்தை தூக்கி நிறுத்தி விட்டோம் என்று எடியூரப்பா கூறினாரே. நான் கூறுகிறேன் அது எடியூரப்பாவின் குரல் அல்ல மோடியின் குரல்.
அமைதி வாழ்வு வேண்டும். தமிழகத்துக்கு வேலைவாய்ப்பு எதுவுமே இல்லை. என்ன காரணம். இங்கு நடக்கக்கூடிய அரசு ஊழல் புதை மணலில் புதைந்துள்ள எடப்பாடி அரசு.
முதல்வரின் சம்மந்தி வீட்டில் வருவாய் துறையினர் நுழைகின்றனர், தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை நுழைகின்றனர். இந்த ஊழலை பயந்து தான் தமிழ்நாட்டுக்கு வரவிருந்த தொழிற்சாலைகள் பயந்து ஓடி விட்டன. அவ்வாறு தான் ஹோன்டா நிறுவனம் குஜராத்திற்கு சென்றது. இதே போல் இசுசூ நிறுவனம் ஸ்ரீசிட்டிக்கு போய் விட்டது. பாதிக்கப்படுவது யார் நம் வீட்டு பிள்ளைகள். கடன் வாங்கி, தங்க சங்கலியை வைத்து படிக்க வைக்கிறோமே.
தண்ணீர் வரியை கொடுத்துவிட்டு தண்ணீரே வரவில்லையே என்று கேட்டால் கழிவுநீர் பைப்பை துண்டிக்கிறார்கள்.
காவிரியின் குறுக்கே முதலில் அணை கட்ட நேரடியாக அனுமதி கொடுக்க மாட்டோம் மறைமுகமாக கட்டிக் கொள்ளுங்கள் என்று கூறினார் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். இப்போது நேரடி அனுமதி கொடுத்து விட்டனர். இதனால் செழுமை நிறந்த சோழ வளநாடு அடியோடு பாலைவனமாகி விடும்.
நாங்கள் என்ன பாவம் செய்தோம் பிரதமரே. 89 பேர் கஜா புயலில் இறந்தார்களே ஒரு அனுதாபம் கூறினீர்களா. டீவீட்டரில் தினம் 100 செய்தி போடுகிறீர்களே ஒரு அனுதாபம் தெரிவித்தாரா.
ஹிந்தியை எதிர்கின்ற வலுவான சக்தி திராவிட இயக்கம் தானே எனவே இதனை அழிக்க வேண்டும் என்று உள்ளவர்கள் தான் இந்துத்துவ அமைப்பினர்.
அதற்கு வழி வைத்துள்ளனர். இன்னும் சிறிது காலத்தில் அனைத்து நிலங்களையும் விற்க நேரிடும். அதை அனைத்தையும் அம்பானி, அதானி வாங்குவார்கள். மீத்தேன் எடுக்கும் திட்டம் விரிவுப்படுத்தப்படும்.
இவ்வளவு பெரிய ஆபத்து நம்மை சூழ்ந்நிருக்கும் நிலையில் நம்மை காக்க தமிழிலும், ஆங்கிலத்திலும் வல்லமை பெற்ற குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும். அது தான் தமிழச்சி தங்கபாண்டியனின் குரல்.
13 அப்பாவியை சுட்டுக் கொன்றார்களே. இந்த கொலை பாதைகளை செய்தது இந்த அரசு. ஏழை பிள்ளைகள் வேலைவாய்ப்பின்றி பசியால் தவிக்கின்றனர். இந்த வேலைவாய்ப்பின்மையை போக்க தொழிற்சாலைகள் வர வேண்டும். அதற்கு தி.மு.க. வுக்கு வாக்களியுங்கள்.
லட்சக் கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தமிழச்சியை வெற்றி அடையச் செய்யுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.