சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தின் வளாகத்தில் கருணாநிதியின் கம்பீர சிலை நிறுவப்படும் எனவும் ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 1.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 16 அடியில் தயாராகும் சிலையை, 12 அடி பீடத்தில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு இடையே கருணாநிதி சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கானப் பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சிலை திறப்பு விழா வரும் மே 28ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. விழாவில் கலந்துகொள்ளும் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, கருணாநிதியின் சிலையைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையுரையாற்றவுள்ளார். தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றுகிறார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாமஸ் கோப்பையினை வென்ற இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!