ETV Bharat / state

காயத்ரி ரகுராமனை கண்டித்து விசிக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : Nov 18, 2019, 10:41 PM IST

சென்னை: நடிகை காயத்ரி ரகுராமை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியை சேர்ந்த பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

காயத்ரி ரகுராமனை கைது செய்ய வலியுறுத்தி விசிக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்!

விசிக தலைவரும் சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சில நாட்களுக்கு முன்னதாக கோவில் கோபுரங்களில் உள்ள சிலைகள் குறித்தான பேச்சு சர்ச்சை ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்து இந்து அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் fருத்துக்களை வெளியிட்டுவரும் நிலையில் பிரபல நடன இயக்குனரும், நடிகைமான காயத்ரி ரகுராம் திருமாவளவன் பேச்சு குறித்து பதிவிட்டிருந்தார். இந்த பதிவானது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று காயத்ரி ரகுராமிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரின் வீட்டின் முன்பு பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் சிலர் வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் மத்தியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய காயத்ரியை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

காயத்ரி ரகுராம் வீட்டில் முற்றுகையிட வந்த பெண்களை காவல் துறையினர் கைது செய்தனர். அப்போது காயத்ரியை கைது செய்யவில்லையென்றால், தாங்கள் தீக்குளிப்போம் என சில பெண்கள் கூறினர். இதனால் அந்த பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

Intro:காயத்ரி ரகுராமனை கைது செய்
விசிக மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

Body:சென்னை,

நடிகை காயத்ரி ரகுராமை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணியை சேர்ந்த 10 பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள நடிகை காயத்ரி ரகுராம் வீட்டை முற்றுகையிடுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனை அடுத்து அவர் வசிக்கும் பகுதியில் காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

நடிகை காயத்ரி ரகுராம் வீட்டில் முற்றுகை இடுவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் வந்தனர். அவர்களை காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்தனர். காவல்துறை அமைத்திருந்த தடுப்பு கம்பிகளை தூக்கிப்போட்டு விட்டு நடிகை காயத்ரி வீட்டை முற்றுகையிட சென்றனர். அவர்களை தடுத்து காவல்துறையினர் கறுப்பு வெளிக்குள் அனுப்பி வைத்தனர்.

அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தங்கள் கையில் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை வைத்து காயத்ரி ரகுராமை அடிப்போம் என கூச்சலிட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள் பேசிய வார்த்தைகள் மிகவும் மோசமாக இருந்தன.

போலீஸ் வேனில் ஏற்றிய பெண்களில் சிலர் காயத்ரி ரகுராமனை கைது செய்யாவிட்டால் பெட்ரோல் ஊற்றி தீ குளிப்பதாக அறிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்தவர்கள், திருமாவளவனை அவதூறாக பேசிய காயத்திரி ராமை கைது செய்ய வேண்டும். கைது செய்து வரை நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இந்துக் கோயில்களில் உள்ள சிலைகள் ஆபாசமாக இருக்கிறது என்றால் அவற்றை மறைக்க வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.