ETV Bharat / state

அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது -திருமாவளவன் - VCK

சென்னை: பாஜகவின் கூட்டணி கட்சி என்ற முறையில் மத்திய அரசின் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிப்பது அதிர்ச்சி அளிப்பதாக சிதம்பரம் தொகுதி எம்.பி திருமாவளவன் கூறியுள்ளார்.

VCK leader thirumavalavan condemned Central Government
author img

By

Published : Jul 26, 2019, 7:47 PM IST

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் பல்வேறு மசோதாக்களை பாஜக அரசு பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு நிறைவேற்றிக்கொள்கிறது. குறைந்தபட்ச ஜனநாயக அணுகுமுறைகூட ஆளும் பாஜக அரசிடம் இல்லை என்பது நடந்துகொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூலம் தெளிவாக தெரிகிறது.

எல்லா மசோதாக்களையும் அதிமுக ஆதரிப்பது அதிர்ச்சி -திருமா!

பாஜகவின் இத்தகைய போக்கை மக்களுக்கு தெரியப்படுத்த மட்டும்தான் எதிர்க்கட்சிகளால் முடியுமே தவிர, எதிர்க்கட்சிகளால் வேறு எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நாடாளுமன்றம் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. பாஜகவின் கூட்டணி கட்சி என்ற முறையில் மத்திய அரசின் அனைத்து மசோதாக்களையும் அதிமுக ஆதரிப்பது அதிர்ச்சியளிக்கிறது” என்றார்.

Intro:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

Body:விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளனர்

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் பல்வேறு மசோதாக்களை அவர்களின் பெரும்பான்மை பலத்தை வைத்துக்கொண்டு பாஜக அரசு நிறைவேற்றிக் கொள்கிறது

தகவல் அறியும் உரிமை சட்டம்,தேசிய புலனாய்வு மையம், முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பு சட்டம்,மனித உரிமை போன்ற பல்வேறு மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி பாஜக அரசு நிறைவேற்றிக் கொள்கிறது

குறைந்த பட்ச ஜனநாயக அணுகுமுறையும் ஆளும் பாஜக அரசிடம் இல்லை என்பது நடந்துகொண்டிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரின் மூலம் தெளிவாக தெரிகிறது

பாஜகவின் இத்தகைய போக்கை மக்களுக்கு தெரியப்படுத்த எதிர்க்கட்சிகளால் முடியும் மற்றும் எதிர்க்கட்சிகளால் வேறு எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நாடாளுமன்றம் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது இது பெரிய வேதனைக்குரிய ஒன்றாகும்

எல்லாம் சட்ட மசோதாவையும் பாஜக கட்சியின் கூட்டணி கட்சியான அதிமுக ஆதரவு தெரிவிப்பது அதிர்ச்சி அளித்து வருகிறது

பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் பாதுகாப்பு இல்லை என்பதை நெல்லை விவகாரம் நம்மை தெளிவுபடுத்தியுள்ளது சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபடும் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுத்தல் வேண்டும் இதனால் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்

வன்முறைகளையும் குற்றச் செயல்களையும் அரசியலுடன் ஒப்பிட முயற்சி செய்யவில்லை ஆனால் ஆனால் இத்தகைய செயல்களை முன்னெச்சரிக்கையாக கண்காணிப்பின் மூலம் தடுக்கப்பட வேண்டும் அதற்கு தான் ஆட்சி அதிகாரம் அதற்குத்தான் அரசியல் அதிகாரம் ஆனால் ஆட்சியில் உள்ளவர்கள் பொறுப்பற்ற பதிலை கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது

Conclusion:இவ்வாறு திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.