ETV Bharat / state

முண்டாசை காவி ஆக்கியது பாரதியாரை கொச்சைப்படுத்தும் செயல்: திருமாவளவன்

சென்னை: தமிழ்நாடு அரசு பாடப் புத்தகத்தில் பாரதியார் முண்டாசை காவி நிறமாக வரைந்துள்ளது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

Thirumavalavan
author img

By

Published : Jun 5, 2019, 1:28 PM IST

விசிக தலைவர் திருமாவளவன் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பள்ளிவாசலில் காயிதே மில்லத்தின் நினைவடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கன்னிய தமிழர் காயிதே மில்லத்துக்கு வீர வணக்கம் செலுத்தினேன். தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்தை காத்த பெருமை காயிதே மில்லத்தைச் சாரும். தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த இஸ்லாமிய தமிழ்த் தலைவர், காயிதே மில்லத். அப்படிப்பட்ட தலைவரை நினைவுகூர்ந்து என்றும் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்கவும், சாதி, மதவெறி சக்திகளிடம் இருந்து இந்த நாட்டின் அரசியல் அமைப்பை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதி ஏற்போம் என விசிக அறைகூவல் விடுகிறது. இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

விசிக தலைவர் திருமா அளித்த பேட்டி

தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்தது பற்றி திருமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “தமிழ் மொழியை மற்ற மாநிலங்களில் மூன்றாவது மொழியாக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கோரிக்கை தமிழ்நாட்டில் இந்தியை மூன்றாவது மொழியாக ஏற்றுக்கொள்ள வாசல் திறக்கப்படுகிறது என அர்த்தம். அதை ஒருபோதும் தமிழ் தேசிய சக்திகள் அனுமதிக்கமாட்டோம். இந்தி, சமஸ்கிருதம் மூலம் அவர்கள் விரும்பும் கலாசாரத்தை திணிக்க பார்க்கிறார்கள். இந்தித் திணிப்பு அடிப்படை கலாசாரத் திணிப்பு ஆகும். அதன் அடிப்படையில் தான் இந்தித் திணிப்பை எதிர்க்கிறோம்.

தமிழ்நாடு அரசு பாட புத்தகத்தில் பாரதியார் முண்டாசை காவி நிறத்தில் வரைந்துள்ளார்கள். எந்த அளவிற்கு காவியின் தாக்கம் தமிழ்நாட்டை ஆளும் அதிமுக மேல் உள்ளது என்பதை இதன்மூலம் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர், பெரியார் வாழ்க்கை வரலாறை நீக்குகிறார்கள், பாரதியார் முண்டாசை காவி ஆக்குகிறார்கள். படிப்படியாக அதிமுகவை சங் பரிவார் அமைப்பாக மாற்றி வருகிறார்கள் என்று தெரிகிறது. முண்டாசை காவி ஆக்கியது பாரதியாரை கொச்சைப்படுத்தும் செயல், அவரின் கொள்கைக்கு எதிரானது” என்று பதிலளித்தார்.

விசிக தலைவர் திருமாவளவன் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள பள்ளிவாசலில் காயிதே மில்லத் அவர்களின் நினைவடத்தில் மலர் போர்வை போற்றி மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கன்னிய தமிழர் காயிதே மில்லத் அவர்களுக்கு என்னுடைய வீர வணக்கம் செலுத்துகிரேன். தமிழகத்தில் சம நல்லினிக்கத்தை, மத நல்லினிக்கத்தை காத்த பெருமை காயிதே மில்லத்தை சாரும். இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிரேன்.

தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த இஸ்லாமிய தமிழ் தலைவர் காயிதே மில்லத் அவர்கள். அப்படிப்பட்ட தலைவரை நினைவு கூர்ந்து என்றும் சமூக நல்லினிக்கத்தை பாதுகாக்கவும், மத, சாதி வெரி சக்திகளிடம் இருந்து இந்த நாட்டின் அரசியல் அமைப்பை பாதுகாக்கவும் அனைத்து ஜனநாயக சக்திகளும் உறுதி ஏற்போம் என விசிக அறைகூவல் விடுகிறது. 

தமிழ் மொழியை மற்ற மாநிலத்தில் மூன்றாவது மொழியாக ஆக்கவேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கை தமிழகத்தில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக ஏற்று கொள்ள வாசல் திறக்கப்படுகிறது என அர்த்தம். அதை ஒரு போதும் தமிழ் தேசிய சக்திகள் அனுமதிக்க மாட்டோம். ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதம் மூலம் அவர்கள் விரும்பும் கலாச்சாரத்தை திணிக்க பார்க்கிறார்கள். ஹிந்தி திணிப்பு அடிப்படை கலாச்சார திணிப்பு ஆகும். அதன் அடிப்படையில் தான் ஹிந்தி திணிப்பை எதிர்கிறோம். 

தமிழக அரசு பாட புத்தகத்தில் பாரதியார் முண்டாசை காவி நிறத்தில் வரைந்துள்ளார்கள். எந்த அளவிற்கு காவியம் தாக்கம் தமிழக ஆளும் அதிமுக மேல் உள்ளது என்பதை இதன் மூலம் புரிந்தி கொள்ள வேண்டும். அம்பேத்கர், பெரியார் வாழ்க்கை வரலாறை நீக்குகிறார்கள், பாரதியார் முண்டாசை காவி ஆக்குகிறார்கள். இது படி படியாக அதிமுகவை சங் பரிவார் அமைப்பாக மாற்றி வருகிறார்கள் என்று தெரிகிறது. இதை உடனடியாக தமிழக அரசு மாற்ற வேண்டும்..வன்மையான கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். 

முண்டாசில் காவி ஆகியது பாரதியாரை கொச்சை படுத்துவது. அவரின் கொள்கைக்கு எதிரானதுஎதிரானது என கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.