ETV Bharat / state

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சில முக்கிய அறிவிப்புகள் - smalkl ports department

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சில முக்கிய அறிவிப்புகள்

author img

By

Published : Apr 12, 2022, 9:19 PM IST

சென்னை: நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அவை பின்வருமாறு...

* செங்கல்பட்டு நகரத்தை திருச்சி, புதுக்கோட்டை, மானாமதுரை வழியாக தூத்துக்குடி துறைமுகத்துடன் இணைக்கும் துறைமுக சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்படும்.

* கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, காரியாப்பட்டி வழியாக தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் தொழிற்தட துறைமுகச் சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.4 கோடி மதிப்பில் தயாரிக்கப்படும்

* சென்னை அண்ணா சாலையில் 5 குறுக்கு சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலைகள் ரூ.485 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

* சென்னை மாநகரப் பகுதியில் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை உயர்மட்ட சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரூ.45 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

* சென்னை மாநகரப் பகுதியில் நான்கு இடங்களில் ரூ.56 கோடி மதிப்பில் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்படும்.

* மூன்று நகரங்களுக்கு புறவழிச் சாலைகள் ரூ.500 கோடி மதிப்பில் அமைக்கப்படும். இரண்டு நகரங்களுக்கு புறவழிச் சாலைகள் அமைக்க ரூ.40 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* அனைத்து காலநிலைகளிலும் தங்குதடையற்ற போக்குவரத்து என்ற முதலமைச்சரின் முத்தாய்ப்பான திட்டத்தின்கீழ் 435 தரைப்பாலங்களை உயர்மட்ட பாலங்களாக மாற்ற ரூ.1105 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

* மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பசுமலையில் புதிய சாலை ரூ.26.33 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.

* வேலூர் சி.எம்.சி எதிரில் சுரங்கப்பாதை மற்றும் கரூர் பேருந்து நிலையத்தில் நடைமேம்பாலம் அமைக்க ரூ.25 லட்சம் மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.

* தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு கடல்சார் பயிற்சி நிறுவனத்தின் தரத்தை நவீன வசதிகளுடன் ரூ.5 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

இதையும் படிங்க: கரோனா நோயாளிகள் ஒருவரும் இல்லை; பூஜ்ஜிய எண்ணிக்கையை சாதித்துக்காட்டிய சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.