ETV Bharat / state

மீனவர்கள் மீது தாக்குதல்... இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்க மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு கோரிக்கை - ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

இலங்கை கடற்படையினர் நம் நாட்டு மீனவர்களைத் தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசுக்குத் தூதரக ரீதியாக வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிப்பதற்கு மத்திய பாஜக அரசு எவ்விதத்திலும் துணை போகக்கூடாது என திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.

டி.ஆர்.பாலு எம்.பி.
டி.ஆர்.பாலு எம்.பி.
author img

By

Published : Oct 28, 2020, 9:51 AM IST

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் பாட்டில்கள் கொண்டு தாக்கியதில் ஒரு மீனவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்ட படகுகளில் வலைகளை அறுத்து எறிந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவரும், பொருளாளருமான டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், “

"கச்சத்தீவு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் நடத்தியிருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மீனவர்களைக் காக்கை குருவிகள் போல் சுட்டுக் கொல்வதும், கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்துவதும் - அவர்களின் மீன்பிடி படகுகளை ஈவு இரக்கமின்றி அடித்து உடைத்துச் சேதப்படுத்தி - வலைகளை அறுத்து எறிந்து நாசம் செய்வதும் இலங்கைக் கடற்படையினரின் தொடர்கதையாகி வருகிறது.

இலங்கை நாட்டின் கடற்படையினர் - நம் நாட்டு மீனவர்களைத் தாக்குவதையும் - அவர்கள் மீது கொடும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் கல் வீசுவதும் இரு நாட்டு நல்லுறவுகளுக்கு எவ்விதத்திலும் ஒவ்வாத அணுகுமுறை! மீனவர்களை அச்சுறுத்தி மனித உரிமையை - சர்வதேச விதிமுறைகளை மீறும் அப்பட்டமான அடாவடிப் போக்காகும்.

ஆனால், நம் நாட்டின் மீனவர்கள் மீது நடக்கும் தாக்குதலைக் கண்டுகொள்ளாமல் - தூதரக முயற்சிகள் மூலம் அதைத் தடுத்து நிறுத்தாமல் மத்திய பாஜக அரசு வேடிக்கை பார்ப்பது இந்திய மீனவர்களாகவே இருந்தாலும் - அவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தானே என்ற அலட்சிய மனப்பான்மையோ என்ற சந்தேகம் வருகிறது. தங்களின் தினசரி வாழ்வாதாரத்தைத் தொலைத்துவிட்டுப் பரிதவிக்கும் மீனவர்கள் நலனில் பாராமுகமாக மத்திய பாஜக அரசும் - அந்த அரசுக்கு அழுத்தம் தராமல் அதிமுக அரசும் அமைதி காப்பது கண்டனத்திற்குரியது.

ஆகவே இலங்கை கடற்படையினர் நம் நாட்டு மீனவர்களைத் தாக்குவதை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசுக்குத் தூதரக ரீதியாக வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும் - தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை இலங்கை அரசு பறிப்பதற்கு மத்திய பாஜக அரசு எவ்விதத்திலும் துணை போகக்கூடாது என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.