சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.12) தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாக புகார் அளித்ததார்.
அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன் தினம் (அக். 13) ஆளுநரை சந்தித்துப் பேசினார். இந்நிலையில் தற்போது எல்.முருகன் ஆளுநர் இடையேயான இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்து உத்தரவிட்டார். முன்னாள் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து, தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதையும் படிங்க: பாஜக கொடுத்த அழுத்தத்தால்தான் கோயில்கள் திறப்பா? - சேகர்பாபு பதில்