ETV Bharat / state

தென்னிந்தியாவை, 'பாரதத்தின் கலாச்சார கோட்டை' என்று சொன்னால் மிகையாகாது - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்..! - meenakshi thirukalyanam

Union Defense Minister participated in Meenakshi Utsavam: சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடைபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா என்பது ஒரு நாடு இல்லை இது மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்தைத் தொடர்ந்து, பொய் பரப்புரைகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

திருக்கல்யாண உற்சவ விழாவில் பங்கேற்ற ராஜ்நாத் சிங்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 16, 2023, 8:53 PM IST

சென்னை: முதல்முறையாக மதுரைக்கு வெளியே 108 ஓதுவா மூர்த்திகள் மந்திரங்கள் முழங்க நடராஜர் திருச்சபையில் திருமுறை திருவிழாவில் மீனாட்சி திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 12 திருமுறைகளைப் போற்றிடும் வகையில் 'திருமுறை திருவிழா' இன்று (டிச.16) தேதி சென்னை நீலாங்கரை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

முதல்முறையாக மதுரைக்கு வெளியே சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். மேலும் தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, திருவாடுதுறை, தருமபுரம், மதுரை உள்ளிட்ட பல்வேறு சைவ மட ஆதினங்கள் உள்ளிட சைவ மட பீடாதிபதிகளும் பங்கேற்றனர்.

மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், நாதஸ்வர இசை, 100 மாணவர்களின் திருமுறை இசை பாடல், திருமுறைகளால் அதிகம் நாம் பயன் பெறுவது பொருளா? அருளா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் உள்ளிட்ட ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், "சமீப காலங்களில் பாரதம் மற்றும் ஆன்மிக அம்சங்களைக் குறித்துத் தொடர்ந்து பொய்யான பரப்புரை நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்தியா என்பது ஒரு நாடு இல்லை.

இது மாநிலங்களின் ஒன்றியம் என்ற கருத்தைத் தொடர்ந்து, பொய் பரப்புரைகள் செய்யப்பட்டு வருகிறது. இது இந்தியாவின் தேசிய மற்றும் கலாச்சாரத்தைத் தவறான வரலாற்றுக்கல் மூலம் பேசப்பட்டு வருகிறது. மேலும், பாரத்தின் ஒற்றுமையைச் சீர்குலைவு மற்றும் பிரிவினைவாத போக்குகளைப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்த்து வருகிறார். மேலும் இந்தியாவின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து தமிழ் மக்களின் பங்களிப்பையும், செழுமையான கலாச்சாரத்தையும் தொடர்ந்து அவர் பேசி வருகிறார் இந்திய நாட்டின் பிரதமர்.

தென்னிந்தியா நமது இந்தியக் கலாச்சாரத்தைப் பாதுகாத்த விதம் நிச்சயம் பாராட்டுக்குரியது ஆகும். தென்னிந்தியாவை, 'பாரதத்தின் கலாச்சார கோட்டை' என்று சொன்னால் மிகையாகாது. தென்னிந்தியா இந்தியக் கலாச்சாரத்தின் பாதுகாப்பான வீடு ஆகும். இந்தப் பிரம்மாண்ட திருவிழாக்கள், ஒவ்வொரு பக்தரும் ஆன்மீக எழுச்சியை நோக்கிப் பயணிக்கும் ஆன்மீக பயணத்தை நினைவூட்டுகிறது" என்று பேசினார்.

இதையும் படிங்க: பழனி கோயிலில் பஞ்சாமிர்த பில் விவகாரம்: இந்து அறநிலையத்துறையின் மீது மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்படும்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.