சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் அருகே காமராஜபுரத்தில் கார் ஒன்று சாலையில் இடையூறாக நின்றுகொண்டிருந்தது. அப்போது, அதனை அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் சென்ற காவல் துறையினர் சோதனை செய்ததில் செம்மரக்கட்டைகள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து காரை சேலையூர் காவல் நிலையத்திற்கு கொண்டுவந்த காவல் துறையினர் கார் நின்ற பகுதியில் உள்ள கடையிலிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்தனர்.
காரை ஓட்டிவந்த மேடவாக்கம் பூங்கா தெருவைச் சேர்ந்த ஷாஜஹான் (36) என்பவரைக் கைதுசெய்தனர். அவரது வீட்டில் பதுக்கிவைத்திருந்த செம்மரக் கட்டைகளையும் பறிமுதல்செய்தனர்.
![two tonnes of red wood seized by Selaiyur police](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-04-accused-visual-script-photo-7208368_11032020115537_1103f_1583907937_607.jpg)
மொத்தம் இரண்டு டன் செம்மரக் கட்டைகளைப் பறிமுதல்செய்த காவல் துறையினர் செம்மரக்கடத்தலில் தொடர்புடைய காமராஜபுரத்தைச் சேர்ந்த மூசா உள்பட மேலும் பலரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க... ஆவடி அருகே 500 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல்