காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம், செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் உள்ள பெட்ரோல் டீசல் விற்பனை நிலையங்களில் இருந்து மீனவர்களுக்கு மானிய விலையில் டீசல், டேங்கர் லாரி மூலம் விற்பனை செய்யப்படும்.
இவற்றை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் விற்பனை விலையை விடக் குறைவாக தொழிற்சாலைகள், பேருந்துகள் மற்றும் சரக்கு லாரிகளுக்கு சிலர் விற்பனை செய்து வருவதாக ஒரகடம் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல்துறையினர் ஒரகடம் பகுதியில் ரோந்து இன்று (செப்டம்பர் 5) பணியில் ஈடுபட்டபோது, இரண்டு டீசல் டேங்கர் லாரிகள் மூலம் சரக்கு லாரிகளுக்கு மானிய விலையில் டீசல் நிரப்பிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. பின்னர், இரண்டு டீசல் டேங்கர் லாரிகளையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரை கைது செய்தனர்.