ETV Bharat / state

சென்னையில் சந்தேகத்திற்குரிய முறையில் தீப்பிடித்து எரிந்த கார்கள்: எப்படி? - Chennai district

பழவந்தாங்கல் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு கார்கள் திடீரென சந்தேகத்துக்குரிய முறையில் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மர்மமான முறையில் தீ பிடித்து எரிந்த கார்கள்

author img

By

Published : Dec 15, 2022, 4:36 PM IST

சென்னை: ஆலந்தூர் அடுத்த பழவந்தாங்கல் குமரன் தெரு சக்தி விநாயகர் கோயில் எதிரில் ராஜேஷ் மற்றும் காந்திமதி ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு கார்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு கார்களும் தீப்பிடித்து எரிவதாக அப்பகுதி மக்கள் கிண்டி தீயணைப்பு துறையினக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் இரண்டு தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை அரை மணிநேரம் போராடி அனைத்தனர். ஆனால், அதற்குள் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

இந்த தீ விபத்தில் காரில் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. அப்பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு கார்களும் எப்படி, தீப்பிடித்து தெரிந்தன என்பது குறித்து தெரியவில்லை என காரின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த பழவந்தாங்கல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: செங்கோட்டை திமுகவில் உட்கட்சி பூசல்.. சேர்மனை கண்டித்து கவுன்சிலர் தீக்குளிக்க முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.