சென்னை: கேனல் பேங்க் ரோடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முகமது அல்திரிப் (44). இவருக்கு அபுபக்கர்(14), முகமது அன்னாஸ் (12) என இரண்டு மகன்கள் உள்ளனர். முகமது அல்திரிப், அவரது மனைவி ஆகியோர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 12ஆம் தேதி இந்த தம்பதி, தங்களது இரண்டு மகன்களையும் வீட்டில் தனியாக விட்டுவிட்டு கேகே நகர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் முகமது அல்திரிப்பை தொடர்பு கொண்ட அவரது உறவினர் ஒருவர், தங்கள் மகன்கள் இருவரும் கையில் பணத்துடன் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றித்திரிந்தனர். இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டுவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதி உடனடியாக வீட்டிற்குச் சென்றனர். அப்போது, வீட்டில் இருந்த இரண்டு மகன்களும் காணவில்லை. அவர்களது பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் பயந்துபோன தம்பதி உடனடியாக அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
![காணமால் போன சிறுவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/14723819_missing.jpg)
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவர்களது பகுதியிலுள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சேலம் வந்த ரயிலில் கட்டுக் கட்டாகப் பணம், நகைகள் பறிமுதல்