ETV Bharat / state

ஆண்டிற்கு 2,3 முறை பிறந்தநாள் வரக்கூடாதா என ஏங்கியுள்ளேன் - முதலமைச்சர் ஸ்டாலின் - முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்

பார்வையற்றோர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒவ்வொரு முறையும் நான் சொல்வதுண்டு, ஆண்டிற்கு இரண்டு முறை, மூன்று முறை பிறந்தநாள் வரக்கூடாதா, வந்தால் அடிக்கடி உங்களை வந்து பார்க்கலாமே, அந்த வாய்ப்பு கிடைக்குமே என்று நான் பலமுறை ஏங்கியதுண்டு என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 28, 2023, 10:28 PM IST

சென்னை: சிறுமலர் பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி இன்று (28.2.2023) நடைபெற்ற நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த இந்நிகழ்வில் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ந்தார். மேலும் இந்நிகழ்வில் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் பங்கேற்றார்.

இதில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், ”நீங்கள் என் மீது வைத்துள்ள அன்பு, என் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை, அதே போல் நான் உங்கள் மீது வைத்திருக்கக்கூடிய பாசம், அன்பு, அந்த உணர்வோடு உங்களுக்கு நன்றி சொல்ல, உங்களுடைய வாழ்த்துகளைப் பெற, நான் இங்கு வந்திருக்கிறேன். 1984லிருந்து தொடர்ந்து ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் இந்த பள்ளிக்கு உங்களை காண நான் வருவதுண்டு. ஆனால், தொடக்கத்தில் பிறந்தநாள் அன்று வருவேன்.

இப்போது எல்லாம் பிறந்தநாளுக்கு முதல் நாளே உங்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பை நான் தொடர்ந்து பெற்று வருகிறேன். ஆற அமர உங்களிடத்தில் உட்கார்ந்து, உங்களுடன் உரையாடி, கலை நிகழ்ச்சிகளை, உங்களுடைய அன்பை, வாழ்த்துகளை பொறுமையாக பெற்று செல்ல வேண்டும் என்பதற்காகத் தான் முன்கூட்டியே வந்திருக்கின்றேன்.

ஒவ்வொரு முறையும் நான் சொல்வதுண்டு, ஆண்டிற்கு இரண்டு முறை, மூன்று முறை பிறந்தநாள் வரக்கூடாதா, வந்தால் அடிக்கடி உங்களை வந்து பார்க்கலாமே, அந்த வாய்ப்பு கிடைக்குமே என்று நான் பலமுறை ஏங்கியதுண்டு. ஆனால், அப்படி வந்தால் வயது அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

உங்களை சந்திக்கும் போதெல்லாம் எனக்கு பெரிய மகிழ்ச்சியான உணர்வு, இங்கே வாழ்த்துகளை மட்டும் அல்ல. இங்கே வரவேற்புரை ஆற்றியபோதும் சரி, எனக்கு வாழ்த்து சொன்ன போதும் சரி, கலை நிகழ்ச்சிகள் மூலமாக பாடல்கள் ஒலித்த நேரத்திலும் சரி, ஏறக்குறைய 22 மாதங்களாக நடந்து கொண்டு இருக்கக்கூடிய நமது ஆட்சியினை நான் என்னுடைய ஆட்சி என்று சொல்ல மாட்டேன்.

நம்முடைய ஆட்சி, உங்கள் ஆட்சி, அந்த ஆட்சியில் செய்து கொண்டிருக்கக்கூடிய சாதனைகளை எல்லாம் பட்டியல் போட்டீர்கள் என்றால், நாம் இவ்வளவு செய்திருக்கிறோமா என்று எனக்கே வியப்பாக இருக்கிறது.
அந்த அளவிற்கு நீங்கள் அதை எல்லாம் நினைவுபடுத்தி, இங்கே சுட்டிக்காட்டியதை நான் எப்படி கருதுகிறேன் என்றால், இன்னும் நிறைய செய்ய வேண்டும், இன்னும் உங்களது பாராட்டை பெற வேண்டும் என்று எண்ணுகிறேன்.

அப்படிப்பட்ட ஒரு ஆட்சியை, உங்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ற வகையிலே நாம் இங்கே நடத்திக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஒரு செய்தியை கூட நான் அடிக்கடி சொல்வதுண்டு. நான், இந்த பள்ளிக்கு பல பொறுப்புகளிலிருந்து வந்திருக்கிறேன். 1984ஆம் ஆண்டிலிருந்து எம்.எல்.ஏவாக வந்திருக்கிறேன், சென்னை மாநகர மேயராக வந்திருக்கிறேன், உள்ளாட்சித் துறை அமைச்சராக வந்திருக்கிறேன், துணை முதலமைச்சராக இருந்த போதும் வந்திருக்கிறேன், எதிர்கட்சி தலைவராகவும் வந்திருக்கிறேன், இன்றைக்கு முதலமைச்சராக வந்து கொண்டிருக்கிறேன்.

ஆனால், ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிக் கொள்கிறேன். எந்த பொறுப்பில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்போதும் வருவேன், அந்த பாசம் எனக்கு உங்களிடம் இருக்கிறது, இந்த சிறுமலர் பள்ளியை பொறுத்தவரைக்கும் நான் அந்த பாசத்தை பெற்றிருக்கிறேன் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி கொள்கிறேன்.

எனக்கு எத்தனை பொறுப்புகள் இருந்தாலும், எத்தனை நிகழ்ச்சிகளுக்கும் சென்றாலும், அது அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கட்சி நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அல்லது பொதுவான நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அதில் கிடைக்கின்ற சிறப்பு, பெருமையை விட, மகிழ்ச்சியைவிட, இங்கே வருகின்ற போது தான் நான் அதிகமான பூரிப்பை, மகிழ்ச்சியைப் பெறுவதுண்டு.

அந்த வகையிலே தான் நீங்கள் அளித்திருக்கக்கூடிய வாழ்த்துகளை, உற்சாகத்தை உங்களுடைய நம்பிக்கையை என்றும் மனதில் வைத்துக்கொண்டு, என்னுடைய பணியை உங்களுக்காக நிறைவேற்ற காத்திருக்கிறேன், தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு வளர்ச்சி அடைகிறது - பொடி வைத்து பேசிய துணை குடியரசுத்தலைவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.