ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 20,000 போலீசார் குவிப்பு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 20,000 போலீசார் குவிப்பு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 20,000 போலீசார் குவிப்பு
author img

By

Published : Aug 26, 2022, 10:56 AM IST

சென்னை: கரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளுக்கு பின்னர் இரண்டு வருடங்களுக்கு பிறகு, ஆகஸ்ட் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை உட்பட அதனைச் சுற்றி விநாயகர் சிலைகள் செய்யும் இடங்களில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னை காவல் ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் இரண்டு இடங்களில் சிலைகள் செய்யப்பட்டு வருவதால், அங்கு சுழற்சி முறையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிலைகள் செய்யும் இடத்தில் சிலை வாங்குபவர்களுடைய முழு விவரங்களையும் காவல்துறை பெற்ற பின்னரே சிலை விற்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

குறிப்பாக உயர் நீதிமன்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் விநாயகர் சதூர்த்தியன்று எந்த வித அசாம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, மொத்தம் 20,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, “பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் மற்றும் பதற்றமான இடங்களான ஜாம்பஜார், திருவல்லிக்கேணி மற்றும் பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் கூடுதல் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். இதுமட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள 89 இந்து இயக்க தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியில் வைக்கப்பட்ட சிலைகளை கரைக்கும் நிகழ்வு செப்டம்பர் 4 ஆம் தேதி நடைபெற உள்ளதால், அப்போது மொத்த காவல்துறையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளது. காசிமேடு, பட்டினப்பாக்கம், எலியட்ஸ் பீச் மற்றும் திருவான்மியூர் என நான்கு இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி ... சிசிடிவி கேமரா பொருத்தும் பணிகள் தீவிரம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.