ETV Bharat / state

மூன்றாம் பாலினத்தவர் பாஸ்போர்ட் விண்ணப்ப வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு! - Transgender passport norms case chennai high court case

சென்னை: மூன்றாம் பாலினத்தவர் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது பாலின அடையாளத்தை கூறுவது குறித்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

transgende
author img

By

Published : Nov 13, 2019, 7:03 PM IST

மூன்றாம் பாலினத்தவர் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைத்து விண்ணப்பிக்க வேண்டுமென்ற விதியை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலிளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1980ஆம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளில் மூன்றாம் பாலினத்தவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைத்துதான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை எதிர்த்து சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சிவகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஒருவர் தன் பாலின அடையாளத்தை கூறுவது என்பது அவரின் தனிப்பட்ட சுதந்திரம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைக்க வேண்டும் எனக் கோருவது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக டிசம்பர் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: போலி பாஸ்போர்ட் தயாரிப்பு: திருச்சியில் 4 பேர் கைது!

Intro:Body:மூன்றாம் பாலினத்தவர்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும் போது, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைத்து விண்ணப்பிக்க வேண்டுமென்ற விதியை எதிர்த்த வழக்கில் மத்திய அரசு பதிலிளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1980ம் ஆண்டு பாஸ்போர்ட் விதிகளில் மூன்றாம் பாலினத்தவர் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவமனையில் இருந்து பெற்ற சான்றிதழை இணைத்து தான் பாஸ்போர்ட்க்கு விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளை எதிர்த்து சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சிவகுமார் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ஒருவர் தன் பாலின அடையாளத்தை கூறுவது என்பது அவரின் தனிப்பட்ட சுதந்திரம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில்,
திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ததற்கான சான்றிதழை இணைக்க வேண்டும் என கோருவது சட்டவிரோதம் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அடங்கிய அமர்வு, மனு தொடர்பாக டிசம்பர் 10ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.