இந்திய ரயில்வே 2020ஆம் ஆண்டு முதல் ரயில்களின் பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வானது 01.01.2020 நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்த கட்டண விலை உயர்வானது படுக்கையறை வசதியுள்ள பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 பைசா வீதமும், குளிர் சாதனப் பெட்டி வசதி உள்ள பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 4 பைசா வீதமும் உயர்ந்துள்ளது. தனி நபர் பார்வையிலிருந்து பார்க்கும் போது பெரிதாக தெரியவில்லை என்றாலும் ஒட்டு மொத்த ரயில்வே துறைக்கு பெரிய லாபத்தை ஈட்டி தரும் வகையில் இந்த கட்டண உயர்வு உள்ளது.
ரயில் கட்டண உயர்வு குறித்து ஈடிவி பாரத் சார்பில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ரயில்வே கட்டண உயர்வு கிலோ மீட்டர் கணக்கில் 2 பைசா, நான்கு பைசா என்பது பெரிய பாதிப்பாக தெரியவில்லை. ஆனால், தொலைதூரம் செல்லும் போது கட்டணமானது 30 ரூபாய் 50 ரூபாய் ஆக உயரும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று என தெரிவித்தனர்.
பயணி குமரேசன் கூறுகையில், இந்த கட்டண உயர்வானது பைசா அளவில் உள்ளதால் பெரிதும் கண்டுக் கொள்ள தக்கதாக தெரியாது என்றும் 5 ரூபாய் 10 ரூபாய் என்று உயரும் போது சிரமமாக இருக்கும் என்றார்.
இதே நிலை தொடர்ந்தால் மாட்டுவண்டியில்தான் செல்லவேண்டும் என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 17 சாக்கு மூட்டைகளில் 1020 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம் பறிமுதல்!