ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 7PM - tamilnadu news

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 News @ 7 PM
Top 10 News @ 7 PM
author img

By

Published : Oct 8, 2021, 7:15 PM IST

1.'ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை' - ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்

ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், கருத்துக் கேட்பு, ஆலோசனை நிலையிலேயே உள்ளதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

2.ஆர்யன் கான் பிணை மறுப்பு

போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.

3.சென்ட்ரல் சதுக்கம் பணிகள் - முதலமைச்சர் நேரில் ஆய்வு

சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே அமையவுள்ள சென்ட்ரல் சதுக்கம் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

4.வரலாறு திரும்பியது.. மீண்டும் டாடா கையில் ஏர் இந்தியா!

1950களில் டாடா குழுமம் ஒன்றிய அரசுக்கு தனது பெரும்பான்மை பங்குகளை விற்ற பின்பு ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமானது. ஒன்றிய அரசின் வசம் உள்ள 100 சதவீத பங்குகளையும் வாங்க டாட்டா குழுமமும் ஏலம் கோரியிருந்தது.

5.குடிபெயர்வோர் பாதுகாவலருக்கு 4 ஆண்டுகள் சிறை

வருமானத்துக்கு அதிகமாக 2.08 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், குடிபெயர்வோர் பாதுகாவலருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

6.திருத்தணி அருகில் ஆக்கிரமிப்புக்கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

திருத்தணி அருகில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடையை அகற்றக் கோரி புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், அரசுப் பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7.தொழிலாளர்கள் முற்றுகை: ஓட்டம் பிடித்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

100 நாள் வேலைத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஓட்டம் பிடித்தனர்.

8.நான் கருவைக் கலைத்தேனா? - சமந்தா பதிலடி

நடிகை சமந்தா தன்னைப் பற்றி, அவதூறு பரப்பி வருபவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.

9.உலக மல்யுத்த சாம்பியன் ஷிப்: வெள்ளி வென்று புதிய வரலாறு படைத்த அன்ஷு மாலிக்

நார்வே நாட்டில் நடைபெற்ற மகளிருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் வெள்ளிப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்துள்ளார்.

10.பருவ மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலை - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார் நிலையில் உள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.