ETV Bharat / state

மாலை 7 மணி செய்திச் சுருக்கம் - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

ஈடிவி பாரத்தின் மாலை 7 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Feb 16, 2021, 7:23 PM IST

1 1100 குறை தீர்ப்பு அலைபேசியில் இருக்கும் குறைகள் என்னென்ன?

1100ல் புகார் கொடுக்கும்போது தனிநபர் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆதார் எண் கேட்கப்படுவது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும். 1100 இணைப்பு கிடைக்க பத்து நிமிடம் ஆகிறது. எனவே கூடுதல் பணியாளர்களை அமர்த்தி, காத்திருக்கும் நேரம் கணிசமாக குறைக்கப்பட வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

2 'மக்களை கசக்கிப் பிழியும் மத்திய அரசு' - விலையேற்றத்தை விவாதித்து வைகோ அறிக்கை

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலைகளை உயர்த்தி மத்திய அரசு மக்களை கசக்கிப் பிழிகிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

3 நத்தை வேகத்தில் நகரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

ஒவ்வொரு நாளும் நாட்டில் நடக்கும் பல்வேறு சாலை விபத்துக்களில் சராசரியாக 415 பேர் கொல்லப்படுகிறார்கள். அதைப் போல, ஆண்டு ஒன்றுக்கு விபத்துக்களில் சிக்கி கைகால் இழந்து முடமாகுபவர்களின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தைத் தாண்டும். உலகத்தில் உள்ள மோட்டார் வாகனங்களில் ஒரு விழுக்காடு தான் இந்தியாவில் ஓடுகின்றன. ஆனால் உலகத்தில் நடக்கும் சாலை விபத்துக்களில் ஆறு விழுக்காடு இந்தியாவில் நிகழ்கின்றன.

4 சிறு, குறு, நடுத்தர நிறுவன முதலீட்டு மானியம் 3 மடங்கு உயர்வு! - முதலமைச்சர் அறிவிப்பு!

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த முதலீட்டு மானியம் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டு, 1.5 கோடி ரூபாய் வரை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

5 விஷாலின் சக்ரா படத்தை வெளியிட இடைக்காலத் தடை

நடிகர் விஷால் நடித்த "சக்ரா" திரைப்படத்தை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.28 ஆயிரம் கோடிக்கு தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: ரூ.28,053 கோடி முதலீடு செய்ய 28 நிறுவனங்களுடன் தமிழக அரசு இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் 68,775 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என அரசு தெரிவித்துள்ளது.

7 'நாராயணசாமி தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும்' - ரங்கசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: ஆளும் காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது என்றும் முதலமைச்சர் நாராயணசாமி தாமாக முன்வந்து பதவி விலக வேண்டும் என்றும் எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி வலியுறுத்தியுள்ளார்.

8 பிப். 23இல் தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் தாக்கல்

சென்னை: இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல்செய்ய, தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வருகின்ற 23ஆம் தேதி கூடுகிறது. இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல்செய்கிறார்.

9 வசந்த பஞ்சமி - பாட்டியை நினைவுகூர்ந்த பிரியங்கா காந்தி!

டெல்லி: வசந்த பஞ்சமி நாளில், தனது பாட்டி இந்திரா காந்தியை நினைவுகூர்ந்து காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார்.

10 'நாட்டின் அமைதியை குலைக்க அந்நிய சக்திகள் முயற்சிக்கின்றன' - உள்துறை இணை அமைச்சர்

டெல்லி: நாட்டின் அமைதி தன்மையை அழிப்பதற்கு அந்நிய சக்திகள் விரும்புவதாகவும், குறிப்பாக டெல்லியை மையமாக வைத்துச் செயல்படுவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.