ETV Bharat / state

காலை 7 மணி செய்தி சுருக்கம் Top 10 news @7 AM - Top 10 news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-7-am
top-10-news-at-7-am
author img

By

Published : Aug 27, 2021, 6:59 AM IST

1. காபூல் குண்டுவெடிப்பு: நான்கு இடங்களில் தாக்குதல் - 90 பேர் உயிரிழப்பு

காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் இதுவரை 12 அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 90 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2. சிறப்பு ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டு மதுரை ரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

3. கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளுக்கான இடைவெளி குறைகிறது - அரசு தகவல்

கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு தவணைகளுக்கான இடைவெளி காலம் குறையலாம் என்று மத்திய அரசுத் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4. விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் தள்ளுபடி - முதலமைச்சர் ரங்கசாமி

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது முதலமைச்சர் ரங்கசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

5. குழந்தை திருமணம் - தடுத்து நிறுத்திய அலுவலர்கள்

மயிலாடுதுறையில் 18 வயது பூர்த்தியடையாத சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை குழந்தைகள் நல அலுவலர்கள் தடுத்தி நிறுத்தினர்.

6. தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்படுத்தினால் உரிமம் ரத்து - மாநகராட்சி எச்சரிக்கை

தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்தும் வணிக நிறுவனங்கள், அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, தொழில் உரிமம் ரத்துசெய்யப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.

7. இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 27

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றையப் பலன்களைக் காண்போம்.

8. பயிற்சியில் குறைவு; ஆட்டத்தில் நிறைவு - ஆண்டர்சன் ரகசியம்!

தற்போதெல்லாம் வலைப்பயிற்சியில் குறைவாக பந்துவீசுதின் மூலம் போட்டியில் அதிக பந்துகளை என்னால் வீச முடிகிறது என இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

9. ENG vs IND: ஆல்-அவுட்டாக அடம்பிடிக்கும் இங்கிலாந்து; ரூட் சாதனை சதம்

மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 423 ரன்களைக் குவித்து, 345 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

10. தெலுங்கு பக்கம் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ் - 'ரிபப்ளிக்' ஃபர்ஸ்ட் லுக்

தெலுங்கில் உருவாகி வரும் 'ரிபப்ளிக்' படத்தில் நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.