ETV Bharat / state

காலை 7 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - காலை 7 மணி செய்தி

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-7-am
top-10-news-at-7-am
author img

By

Published : Aug 21, 2021, 7:13 AM IST

1.விமான நிலைய விரிவாக்கம் - வானதி கோரிக்கை

கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு தமிழ்நாடு அரசு விரைந்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

2.அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விவரம்

தமிழ்நாட்டில் உள்ள 143 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கை வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

3.ராகுல் காந்தி பேஸ்புக் பதிவு நீக்கம்!

சமூக வலைதளம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்ட விதிகளை மீறி பதியப்பட்டதாக ராகுல் காந்தியின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகள் நீக்கப்பட்டன.

4.பாஜகவுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தில் திமுக பங்கெடுக்கும் - ஸ்டாலின்

ஒன்றிய அரசைக் கண்டித்து வரும் செப். 20ஆம் தேதிமுதல் செப். 30ஆம் தேதிவரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

5.ஓணம் பண்டிகை - ரூ.1000 பரிசுத் தொகை அறிவித்த முதலமைச்சர்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 15 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிரடி அறிவிப்பை வெளிட்டுள்ளார்.

6.இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 21

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காண்போம்.

7.ஒரே காலனியில் 21 பேருக்கு கரோனா!

கோயம்புத்தூர் கருத்தம்பட்டி சோமனூர் செல்வபுரம் காலனியில் 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8.சைக்கிள் திருட்டு - சிசிடிவி காட்சி

திருநெல்வேலியில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை அடையாளம் தெரியாத நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

9.'லூசிஃபர்' தெலுங்கு ரீமேக்: வெளியாகும் 'சிரஞ்சீவி 153' அப்டேட்

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் 'லூசிஃபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் 'சிரஞ்சீவி 153' திரைப்படத்தின் புதிய அப்டேட் நாளை ( ஆகஸ்ட் 21 )மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

10.ஐபிஎல் 2021- புது லுக்கில் கலக்கும் தோனி

ஐபிஎல் தொடருக்கு முன்னதாக எம்எஸ் தோனியின் புதிய விளம்பர லுக்கை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.