75ஆவது சுதந்திர தினம்: செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி
நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இன்று(ஆகஸ்ட். 15) டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி உரையாற்ற உள்ளார்.
சுதந்திர, குடியரசு தினங்களன்று கொடி ஏற்றுவதில் உள்ள வித்தியாசங்கள் என்னென்ன?
பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடியானது, சுதந்திர, குடியரசு ஆகிய இரு வேறு தினங்களில் ஏற்றப்படுவதில் உள்ள வித்தியாசஙளைக் கீழே காண்போம்.
காந்தியின் கனவுகளை இன்றும் சுமக்கும் தே கல்லுப்பட்டி ஆசிரமம்
தேசப்பிதா காந்தியடிகளின் நிர்மாணப் பணிகளை, கிராம மேம்பாட்டை இன்றளவும் செய்து வருகிறது தே.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் ஆசிரமம். இந்திய அளவில் மட்டுமன்றி, உலக அளவில் பல்வேறு தலைவர்களும், மக்கள் பணியாளர்களும் வியந்து பாராட்டிய கல்லுப்பட்டி ஆசிரமம், கடந்த 70 ஆண்டு கால வரலாற்றை இன்றும் சுமந்து கொண்டிருக்கிறது. அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர்: சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல்!
தமிழ்நாட்டின் கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தமிழ்நாடு அரசின் முடிவு சமூகநீதி வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் சங்கத் தலைவர் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
காந்தியின் நினைவுகளை உலகறியச் செய்து வரும் மங்கம்மாள் மாளிகை!
இந்திய சுதந்திர வரலாற்றில் மாபெரும் சகாப்தம் மகாத்மா காந்தி என்றால், அவரது வாழ்க்கையின் முக்கியமான சகாப்தமாக இன்றுவரை இருந்து வருகிறது மதுரை.
அன்று 'சவால்'... இன்று 'கதறல்'... மீரா ஆட்டத்தை அடக்கிய போலீஸ்
முடிஞ்சா கைது செய்யுனு போலீஸூக்கு சவால் விட்ட மீரா மிதுன், போலீஸூக்கு பயந்து கதறி வீடியோ வெளியிட்ட காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
தகைசால் தமிழர் விருதை பெற்றார் சங்கரய்யா!
தகைசால் தமிழர் விருதை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா வீட்டிற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட் 14) வழங்கினார்.
கர்நாடகா ஜாலியன் வாலாபாக்!
நாட்டின் 75ஆவது சுதந்திர தினமான இன்று, கர்நாடகா ஜாலியன் வாலாபாக் நிகழ்வான விதுராஸ்வதா துப்பாக்கிச் சூடு மற்றும் கர்நாடகா கொடி சத்தியாகிரகம் குறித்து பார்க்கலாம்.
தமிழ்நாடு எம்.பி.,க்கள் இங்கு மட்டும்தான் புலி - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு!
தமிழ்நாடு எம்.பி.,க்கள் மாநிலங்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. அவர்கள் இங்கு மட்டும்தான் புலி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்
மதுரை ஆதீனத்தின் உடல் நல்லடக்கம்
உடல்நலக் குறைவால் காலமான மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.