1, முதலமைச்சரின் தந்தை கைது!
சத்தீஸ்கர் மாநில முதலமைச்சரின் தந்தை காவலர்களால் கைதுசெய்யப்பட்டார்.
2, கொலம்பியா துணை அதிபருடன் மீனாட்சி லேகி சந்திப்பு!
கொலம்பியா நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்டா லூசியா ராமிரெஸ் (Marta Lucia Ramirez)-ஐ வெளியுறவு இணையமைச்சர் மீனாட்சி லேகி கொலம்பியாவில் சந்தித்துப் பேசினார்.
3, எந்தத் தலைவருக்கு எங்கு சிலை: அமைச்சரின் 17 புதிய அறிவிப்புகள்
செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சட்டப்பேரவையில் 17 புதிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார்.
4, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான முதலமைச்சரின் அறிவிப்புகள்!
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என 110 விதியின்கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
5, விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ரூ.5,000 ஊக்கத்தொகை
தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு கூடுதலாக ஐந்தாயிரம் ரூபாய் என மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
6, மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயம் இல்லை - தமிழ்நாடு அரசு
மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக வருமாறு கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது.
7, அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட தொகை அதிகரிப்பு
மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஐந்து லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக அரசு இன்று (செப். 7) வெளியிட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8, கூடுதல் மின் கட்டணம் - அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்
மின் கட்டணம் செலுத்துவதற்கான 419 கோடி ரூபாய் கூடுதல் வைப்புத்தொகை வசூலிப்பது முதலமைச்சரின் உத்தரவுப்படி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
9, 'மாணவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டால் பள்ளிக்குச் சீல் வைக்கப்படும்'
பள்ளிகளில் மாணவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அப்பள்ளிக்குச் சீல் வைக்கப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
10, எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் சவால்
அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் கோ ஆப்டெக்ஸ் நிறுவனம் லாபத்தில் இயங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அவை முன்னவர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.