1. பொள்ளாச்சி பாலியல் வழக்கு- கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த சிபிஐ
பொள்ளாச்சி பாலியல் வழக்கில், கடந்த ஜனவரி மாதம் மூன்று பேரும், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ அலுவலர்கள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
2. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் வழக்கு: குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸ் தீவிரம்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் நடவடிக்கையில் மகளிர் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
3. தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனத்திற்கு, தருமபுரம் ஆதீனம் நேற்றிரவு தாய் வீட்டு சீதனமாக ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை வழங்கினார்.
4. விரைவில் வருகிறது விவேகானந்தர் நினைவுப் பாறை - திருவள்ளுவர் சிலையை இணைக்கும் கடல்சார் நடைபாலம்!
கன்னியாகுமரி: விவேகானந்தர் நினைவு பாறையையும் ஐயன் திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் கடல்சார் நடை பாலம் 37 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது.
5. 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தில் 2,19,545 பேர் பயன் - சுகாதாரத்துறை
'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தின் மூலம் 2,19,545 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
6. கல்லூரியைத் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறை - உயர் கல்வித்துறை வெளியீடு
கலை மற்றும் அறிவியல், பொறியியல், கால்நடை மருத்துவம், சட்டம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும், வகுப்புகளை சுழற்சிமுறையில் நடத்துவதற்கும் அனுமதி வழங்கி உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
7. ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ - ரயில் நிலையத்தில் இளம்பெண் குத்தாட்டம்
சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் முகக்கவசம் அணியாமல் இருந்த பெண்ணிடம் அபராதம் கேட்ட அலுவலர்களை பார்த்து ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற பாடலை பாடி இளம்பெண் நடனமாடியுள்ளார்.
8. கோடநாடு வழக்கு செப். 2 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9. ஓஎம்ஆர் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படாது- எ.வ.வேலு
மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கும்நிலையில், சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள பெருங்குடி, துரைப்பாக்கம், மேடவாக்கம், கலைஞர் சாலை ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் வசூலிக்கப்படாது என எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
10. தமிழ்நாட்டின் மேற்கு, தென் மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் மேற்கு, தென் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.