ETV Bharat / state

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 News @ 5 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்...

மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
மாலை 5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 26, 2021, 5:26 PM IST

1. தமிழ்நாட்டில் பேருந்துகள் கொள்முதல் நிதி ஒதுக்கீடு எவ்வளவு - உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், சட்டப்படியும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற போதும், நிதி நெருக்கடி காரணமாக வெளிநாட்டு வங்கிகளிடம் உதவி கோரியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் பேருந்துகள் கொள்முதல் நிதி ஒதுக்கீடு எவ்வளவு என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வியெழுப்பினார்.

2. சென்னை புறநகர்ப் பகுதியில் கனமழை - 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, புறநகர்ப் பகுதியில் காலை முதல் மிதமான வெப்பம் நிலவி வந்த நிலையில் தற்போது கன மழை பெய்து வருகிறது.

3. 'தமிழ் படைப்புகள் நீக்கம், பாஜகவின் அழித்தொழிப்பு நடவடிக்கையே'

டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்து தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டது, பாஜகவின் அழித்தொழிப்பு நடவடிக்கையே என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

4. கே.டி.ராகவன் மீது மீண்டும் ஒரு குற்றச்சாட்டு - காவல்நியைலத்தில் புகார்

கே.டி.ராகவனிடம் இருந்து தனது மனைவியை மீட்டு தரக்கோரி செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

5. BMW கார் நிறுவனத்தில் 2ஆவது நாளாக தொடரும் போராட்டம்..!

செங்கல்பட்டு: தொடர்ந்து இரண்டாவது நாளாக BMW நிறுவனத்தின் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

6. தமிழும், தமிழ் நூல்களும் புறக்கணிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை - செல்வப்பெருந்தகை

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழும், தமிழ் நூல்களும் புறக்கணிக்கப்படுவதை தடுக்க, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

7. நாயை கொடூரமாக அடித்துக் கொன்ற தந்தை, மகன்கள் கைது!

விருதுநகர்: சாத்தூர் அருகே நாயை அடித்துக் கொலை செய்த தந்தையையும் இரண்டு மகன்களையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

8. Tamil அல்ல Tamizh - ழகரத்தின் சிறப்பை உறுதிசெய்ய வெற்றியழகன் எம்எல்ஏ கோரிக்கை

தமிழ் மொழியின் ழகரத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையில் *THAMIZH* என்று எழுத நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வில்லிவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றியழகன் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.

9. Master Of All Students - முதலமைச்சருக்கு புகழாரம் சூட்டிய அன்பில்..!

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை Master Of All Students என புகழ்ந்துள்ளார்.

10. ஜெயலலிதா பல்கலைக்கழக விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லை - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதில் எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.