ETV Bharat / state

3 மணிச் செய்தி சுருக்கம் - 3 மணிச் செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்

top-10-news-at-3-pm
top-10-news-at-3-pm
author img

By

Published : Jul 24, 2021, 3:01 PM IST

1.சார்பட்டா பரம்பரையை எதிர்க்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

சார்பட்டா பரம்பரை திரைப்படம் திமுகவின் பரப்புரை படம் எனவும், இப்படத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2.Tokyo Olympics: வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கமாக வெள்ளியை வென்று கொடுத்தார் மீரா பாய் சானு.

3.மீரா பாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்து ஸ்டாலின் ட்வீட்!

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் மகளிர் 49 கிலோ பளு தூக்குதல் எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீரா பாய் சானுவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

4.9.23 லட்சம் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் தடுப்பூசி - அமைச்சர் தகவல்

தமிழ்நாட்டில் 5 வயதிற்குட்பட்ட 9 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகளுக்கு நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

5.சட்டவிரோதமாக உளவு பார்ப்பதை எதிர்க்கிறோம்- பெகாசஸ் குறித்து அமெரிக்கா

ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு எதிராக உளவு மென்பொருளை சட்டவிரோதமாக பயன்படுத்துவதை அமெரிக்கா எதிர்ப்பதாக கூறியுள்ளது.

6.நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது? - அமைச்சர் கே.என்.நேரு

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

7.மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8.சோலையாறு அணையில் நீர் திறப்பு

கோயம்புத்தூரில் பெய்து வரும் கனமழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியதால் இன்று (ஜூலை 24) நீர் திறக்கப்பட்டது.

9.CISCE- மாலை 3 மணிக்கு தேர்வு முடிவுகள்!

சி.ஐ.எஸ்.சி.இ (CISCE) 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 24) மாலை 3 மணிக்கு வெளியாகின்றன.

10.சார்பட்டா பரம்பரை சிறப்பு - உதயநிதி பாராட்டு

அரசியல் நெருக்கடி நிலையை கதையோடு காட்சிப்படுத்தியிருக்கும் ’சார்பட்டா பரம்பரை' சிறப்புக்குரியது என நடிகர் உதயநிதி பாராட்டியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.