ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 3 pm
Top 10 news @ 3 pm
author img

By

Published : Nov 12, 2020, 4:01 PM IST

1. 7.5% ஒதுக்கீட்டால் 395 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கும்!

7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் 395 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் கிடைக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

2. அருந்ததி ராய் புத்தகம் பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கம் - கல்வியாளர்கள் கண்டனம்!

மனோன்மணியம் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய "வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்" புத்தகம் நீக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் எழுத்தாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

3. சௌகார்பேட்டை கொலை சம்பவம்: புனேவுக்கு பறந்த தனிப்படை காவல் துறை!

சௌகார்பேட்டையில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு தனிப்படை காவல் துறையினர் புனே சென்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

4. வரலாற்றில் முதல் முறையாக மந்த நிலைக்குள் தள்ளப்பட்ட இந்திய பொருளாதாரம்: ராகுல் காந்தி காட்டம்

பிரதமர் மோடியின் செயல்களால் வரலாற்றில் முதல் முறையாக இந்தியப் பொருளாதாரம் மந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

5. கரோனா தீநுண்மி மூளையை பாதித்தால் என்னவாகும்? பகுதி 2

ஆரம்பத்தில் ஒரு சுவாச நோய் என்று அறியப்பட்ட கரோனா தொற்று, காலப்போக்கில் மிகவும் மாறுபட்ட அறிகுறிகளையும் பின் விளைவுகளையும் வெளிப்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் (தீநுண்மி) மூளையை பாதித்தால் என்னவாகும் என்பது குறித்த அதிகப்படியான தகவல்களை இந்தத் தொகுப்பில் காணலாம்.

6. முன்னாள் அதிபருடன் நல்ல உறவு வைத்திருந்தேன். பிரிட்டன் பிரதமர் பேச்சால் சர்ச்சை!

ட்ரம்ப்பை முன்னாள் அதிபர் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

7. டம்மியான ட்ரம்ப், நீதிமன்றத்தின் உதவியை நாடும் டிக் டாக்!

அமெரிக்க அரசியலில் டொனால்ட் ட்ரம்ப் புயலின் தாக்கம் தணிந்துள்ள நிலையில், நீதிமன்றத்தின் வாசற்படிகளை சீனாவின் டிக் டாக் நிறுவனம் தட்டியுள்ளது.

8. துடிப்புடன் இருங்கள்: இல்லையேல் உங்கள் தரவுகள் நீக்கப்படும்!

அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் அமல்படுத்தப்படும் நுகர்வோர் கணக்குகளுக்கான புதிய கொள்கைகளை கூகுள் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இதனால் இரண்டு ஆண்டுகளாக ஜி மெயில், டிரைவ், புகைப்படம் கணக்குகளில் செயலற்ற நிலையில் இருந்தால், அதிலுள்ள உள்ளடக்கத்தை நிறுவனம் நீக்கிவிடும்.

9. பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியான சாயிஷா

பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ஒன்றில் நடிக்க சாயிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

10. ஐபிஎல்: அதிக டாட் பால்களை வீசிய டாப் 10 பவுலர்கள் இவங்கதான்!

நடந்து முடிந்த ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக பந்து வீசிய ஜோப்ரா ஆர்ச்சர் 16 இன்னிங்சில் 44 ஓவர்களில், 175 பந்துகளில் பேட்ஸ்மேன்களை ரன் ஏதும் எடுக்கவிடாமல் டாட் பால்களை வீசி முதலிடம் பிடித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.