ETV Bharat / state

11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @11am - 11 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @11am

11 மணி செய்தி சுருக்கம் Top 10 news @11am

author img

By

Published : May 14, 2021, 11:21 AM IST

1. அசாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழப்பு!

திஸ்பூர்: அசாமில் மின்னல் தாக்கியதில் 18 யானைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2. சில்வர் குடத்தில் சிக்கிய சிறுவனின் தலை!

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், கரீம்நகரைச் சேர்ந்த 5 வயது சிறுவன், விளையாடும் போது தவறுதலாக சில்வர் குடத்திற்குள் தலையை விட்டதில் சிக்கிக்கொண்டது.

3. சமூக இடைவெளியை மறந்து தடுப்பூசி மையத்தில் குவிந்த மக்கள்!

கரூரில் கரோனா தடுப்பூசி செலுத்தும் மையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை மறந்து குவிந்து வருவதால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4.முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.25 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

5.முன்னாள் துணை முதலமைச்சர் சகோதரர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

6.கரோனா தடுப்பூசிக்குப் பயந்து ஓடிய பழங்குடியினர்!

நீலகிரியில் வதந்திகளை நம்பி கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் பழங்குடியின கிராம மக்கள் வனப்பகுதிக்குள் சென்றனர்.

7.முதலமைச்சர் குறித்து முகநூலில் அவதூறு வெளியிட்டவர் மீது வழக்கு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
8.காவலர் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவருக்கு குண்டாஸ்!

மணல் திருட்டை தடுக்கச் சென்ற காவலர் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

9.அடுத்தடுத்த நாளில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை கடித்த பாம்புகள்!

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை பாம்புகள் தொடர்ச்சியாக கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

10.காவலாளிகளைக் கட்டிப்போட்டு 73 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் கொள்ளை!

ஊரடங்கால் பூட்டப்பட்டிருந்த டாஸ்மாக் கடையின் காவலாளிகளைக் கட்டிப்போட்டு 73 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.